- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர பணம் சேர விநாயகர் சதுர்த்தி பரிகாரம்

கடன் தீர பணம் சேர விநாயகர் சதுர்த்தி பரிகாரம்

- Advertisement -

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் பலவிதமான நன்மைகளை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக விநாயகருக்கு உகந்த தினங்களில் விநாயகர் வழிபாடு செய்யும்பொழுது அதிக அளவு பலன்கள் உண்டாகும் என்றே கூறலாம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி புதன்கிழமையோடு சேர்ந்து வருகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட புதன்கிழமையோடு விநாயகர் சதுர்த்தி சேர்ந்து வரும் பொழுது அன்றைய நாள் நமக்கு அற்புதமான நாளாக அமையும். அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும் அது பல மடங்கு வெற்றியைத் தரும். கடன் பிரச்சினை தீருவதற்கும் அந்த கடனை தீர்ப்பதற்குரிய பணவரவை பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர பணம் சேர பரிகாரம்

எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் அந்த வேண்டுதலுக்குரிய தெய்வத்தை நாம் வணங்க வேண்டும். அந்த வகையில் விநாயகப் பெருமானை நாம் அனைத்து விதமான வேண்டுதல்களுக்கும் வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அவரே முழு முதல் கடவுளாக திகழ்கிறார். நம்முடைய வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை தான். இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கும் விநாயகர் பெருமான் நமக்கு அருள் புரிவார். அதிலும் புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய விநாயகர் சதுர்த்தியில் செய்யும் பொழுது அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி நாள் அன்று பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 3:52 மணிக்குள் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை செய்யும் பொழுது இந்த பரிகாரத்தையும் சேர்த்து வைத்து செய்தால் இன்னும் நல்ல பலன் உண்டாகும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு பச்சைப்பயிரும் வெல்லமும் வேண்டும். ஒரு கைப்பிடி அளவு பச்சை பயறு இருந்தால் போதும். இந்த பச்சை பயிரை நாம் கடையிலிருந்து வாங்கி வருவது மிகவும் சிறப்பு. வீட்டில் தனியாக பச்சைப்பயிர் இருக்கும் பட்சத்தில் அதைக்கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வெல்லத்தை சிறு துண்டுகளாக உடைத்து நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் போட வேண்டும். நாட்டு சர்க்கரையை கூட பயன்படுத்தலாம். விநாயகப் பெருமானுக்கு முன்பாக வைத்துவிட வேண்டும். முழு மனதோடு விநாயகப் பெருமானை வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த பச்சை பயிறும் வெல்லமும் மதியம் 3:52 மணி வரை அப்படியே விநாயகரின் படத்திற்கு முன்பாகவே இருக்கட்டும். அதற்கு பிறகு இந்த பச்சை பயிறு மற்றும் வெல்லத்தை எடுத்து மண் பாங்கான இடத்தில் எறும்புகள் அதிகம் வரக்கூடிய இடமாக பார்த்து போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கடன் தொடர்பான கர்ம வினைகள் அனைத்தும் தீருவதோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: விநாயகர் ஆலயத்திற்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்

வாழ்க்கையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கடன் பிரச்சினை தீர்வதற்கும் அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்புவதற்கும் புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி நாளன்று இந்த எளிமையான பரிகாரத்தை செய்து முழு பலனையும் பெறுவோம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்