- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க விநாயகர் மந்திரம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க விநாயகர் மந்திரம்

- Advertisement -

காரிய தடையை நீக்கி வெற்றியை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான். என்னதான் விநாயகர் பெருமானை ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன்பாக வழிபாடு செய்து விட்டு தொடங்கினாலும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் தொடங்கக்கூடிய காரியங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட தடைகளை நீக்க வேண்டும் என்றால் சற்று கூடுதலாக விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். சாதாரண கர்ம வினைகளுக்கு சாதாரண வழிப்பாடும் அதிகளவு கர்ம வினைகள் இருந்து எவ்வளவு வழிபாடு செய்தும் அதனால் எந்த பலனும் இல்லை என்று கூறுபவர்கள் சற்று சிறப்பான வழிபாட்டையும் செய்யும்பொழுது அவர்களுடைய மோசமான கர்மவினைகள் படிப்படியாக குறையும். அந்த ஒரு சிறப்பான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்..

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க மந்திரம்

விநாயகர் பெருமானை பலரும் பலவிதங்களில் பல நாட்களில் வழிபாடு செய்வார்கள். விநாயகப் பெருமானை இந்த நாளில் தான் வழிபாடு செய்ய வேண்டும் இந்த நாளில் வழிபாடு செய்யக்கூடாது என்ற எந்த நிபந்தனைகளும் கிடையாது. அனுதினமும் நாம் விநாயகரை வழிபாடு செய்யலாம். இருப்பினும் கூடுதல் பலனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதியில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அதேபோல் தான் சாதாரணமாக விநாயகரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் செய்யக்கூடிய காரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். இதுவே தடைகள் அதிக அளவில் இருக்கிறது. என்னும் பட்சத்தில் சற்று கூடுதலாக விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கூட்டுல் வழிபாடாக தான் இந்த வழிபாடு திகழ்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை விநாயகர் பெருமான் அவதரித்த நாளாக கருதக்கூடிய விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை பிரம்ம முகூர்த்த நேரமான 3 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மந்திர வழிபாட்டை நாம் செய்யலாம். பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. எந்த மந்திரத்தை கூறி வழிபட்டாலும் அந்த மந்திரத்திற்கு உரிய பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி அன்று பாராயணம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் காரிய தடைகள் முற்றிலும் நீங்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

இந்த மந்திர வழிபாட்டை எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு முன்பாக கண்டிப்பான முறையில் குளித்திருக்க வேண்டும். அசைவம் எதுவும் சாப்பிட்டிருக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ அல்லது வெளியிடங்களிலோ எந்த இடத்தில் நமக்கு இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து அரை மணி நேரம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் விநாயகப் பெருமானை மட்டும் நினைத்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

தரையில் அமர்ந்து கூறுபவர்கள் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து கூறுவது என்பது நல்ல பலனை தரும். முதலில் விநாயகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்துவிட்டு நம்முடைய கோரிக்கை, வேண்டுதல் எதுவோ அதை விநாயகப் பெருமானிடம் முன்வைத்துவிட்டு இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

மந்திரம்

” ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே ஸ்வாகா “

இதையும் படிக்கலாமே: விநாயகர் சதுர்த்தி வழிபாடு முறை

விநாயகப் பெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருந்தாலும் இந்த மந்திரத்தை முழுமனதோடு விநாயகரை நினைத்து கூறுபவர்களுக்கு அவர்கள் தொட்ட காரியத்தில் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்