- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் விரைவில் அடைய கிராம்பு பரிகாரம்

கடன் விரைவில் அடைய கிராம்பு பரிகாரம்

- Advertisement -

நாம் சம்பாதிக்கக்கூடிய பணம் நமக்கு தேவைப்படும் நேரத்தில் உபயோகப்படாமல் அந்த நேரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டால் நமக்கு கை கொடுத்து உதவக்கூடியது கடனாக தான் இருக்கும். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பலரும் பலவிதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கஷ்டங்கள் விரைவில் தீர வேண்டும் என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடனை திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்துவதற்கு போதுமான அளவு பணவரவு வரவேண்டும். இவை இரண்டையும் ஒரு சேர நமக்கு கிடைக்க உதவக்கூடிய ஒரு பரிகாரமாக தான் கிராம்பு பரிகாரம் திகழ்கிறது. அந்த கிராம்புப் பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர கிராம்பு பரிகாரம்

மகாலட்சுமியின் அருள் இருந்தால் நமக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பண வரவு தாராளமாக இருந்தால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருக்காது, ஒருவேளை கடன் வாங்கி விட்டோம் அதற்குப் பிறகு மகாலட்சுமி அருள் கிடைத்தால் கூட அந்த கடனை நம்மால் விரைவில் அடித்து விட முடியும். அதனால் மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் கடனை அடைப்பதற்குரிய முயற்சிகளை நாம் செய்யும்பொழுது அந்த முயற்சிகள் வெற்றியடைந்த அதன் மூலம் கடன் விரைவில் அடையும். இதற்கு உதவக்கூடிய ஒரு கிராம்பு பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் கிராம்பு. கிராம்பை பயன்படுத்தி பலவிதமான வசிய பரிகாரங்கள், தாந்திரீக பரிகாரங்களை செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். ஒருசிலர் கிராம்பை பயன்படுத்தி மகாலட்சுமிக்கு தீபம் கூட ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். கிராம்பின் வாசனைக்கு மகாலட்சுமி வசியம் ஆவார்கள் என்றும் பொருள் படும். அப்படிப்பட்ட கிராம்பையும் கிராம்பு எண்ணெயையும் பயன்படுத்தி நாம் கடனை அடைப்பதற்காக செல்லும்பொழுது செய்ய வேண்டிய ஒரு சில பரிகாரங்கள் விரைவிலேயே கடனை அடைப்பதற்குரிய வாய்ப்புகளை உண்டாக்கும்.

கையில் பணம் இருக்கிறது அந்த பணத்தை கடனை அடைப்பதற்காகவோ அல்லது கடனுக்குரிய வட்டி தொகையை செலுத்துவதற்காகவோ செல்கிறோம் என்னும் பட்சத்தில் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பாக கையில் கிராம்பு எண்ணையை தடவிக்கொண்டு பிறகு அந்த பணத்தை கையில் வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். கையில் இருக்கும் பணத்தை செலுத்தி கடனுக்குரிய வரவை மேற்கொள்ள வேண்டும். கிராம்பு எண்ணெய் தடவிய கையில் பணத்தை வைத்து நாம் செலுத்துவதன் மூலம் அந்த கடனை அடைப்பதற்குரிய பணவரவு நம்மை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை பணத்தை நேரடியாக செலுத்தாமல் வங்கி பரிவர்த்தனை மூலம் செய்வதாக இருக்கும் பட்சத்தில் குளிப்பதற்கு முன்பாகவே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும். இடது கையில் கல் உப்பையும் வலது கையில் கிராம்பையும் வைத்துக்கொண்டு மனதார விரைவிலேயே கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இடது கையில் இருக்கக்கூடிய கல் உப்பை நம்முடைய தலையை வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுற்றி தண்ணீரில் கரைத்து விட வேண்டும். வலது கையில் இருக்கக்கூடிய கிராம்பை அப்படியே எடுத்து பூஜையில் வைத்து விடுங்கள். பிறகு குளித்து முடித்துவிட்டு பூஜையறையில் எப்பொழுதும் பூஜை செய்யும் பொழுது கற்பூர ஆரத்தி காட்டும் சமயத்தில் அந்த கிராம்பை எரித்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு நம்முடைய வங்கி பரிவர்த்தனையை நாம் செய்யும்பொழுது கடன் ஏற்படுவதற்குரிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கி விரைவிலேயே கடனை செலுத்தி விடலாம்.

இதையும் படிக்கலாமே: அஷ்ட செல்வங்கள் பெருக பஞ்சமி வழிபாடு

தன வசியத்தை அதிகரிக்க கூடிய கிராம்பை பயன்படுத்தி இந்த முறையில் பரிகாரம் செய்துவிட்டு கடனை அடைப்பதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சனை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்