அனைவருமே ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் பலரும் வறுமை நிலையில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வறுமையையும் கஷ்டத்தையும் நீக்கி நல்ல ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கும், குடும்பத்தில் இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்குவதற்கும் பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியின் அருளை பெற்றுவிட்டால் போதும். அப்படி மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு மருதாணி செடியை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கஷ்டங்களை தீர்க்கும் வழிபாடு
வறுமை நிலை முற்றிலும் நீங்கி படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவதற்கு நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யலாம். மகாலட்சுமி தாயாரை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதை விட மகாலட்சுமியின் ஸ்வரூபமாக திகழக்கூடிய உயிருள்ள ஒரு ஜீவனை நாம் வழிபாடு செய்தோம் என்றால் விரைவிலேயே நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அப்படி உயிர் உள்ள ஒரு ஜீவனாக திகழக்கூடியவை தான் செடி வகைகள். நம்முடைய ஹிந்து தர்மத்தில் மரங்களை வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கிறது. பொதுவாகவே வீட்டில் மகாலட்சுமியின் அம்சமான துளசி செடியை வைத்து வழிபாடு செய்வோம். துளசி செடியோடு சேர்த்து இந்த ஒரு செடியையும் நாம் வைத்து வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும்.
பொதுவாகவே நாம் செய்யக்கூடிய சில செயல்கள் நம்மிடம் இருக்கக்கூடிய தரித்திரத்தை நீக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு முழு பலனை தருவதற்காக சில செயல்களை செய்து விட்டு வழிபாடு செய்வோம். அப்படி செய்யக்கூடிய ஒரு செயல்தான் கைகளில் மருதாணி வைத்துக் கொள்வது. மருதாணி என்பது மிகவும் வசீகரமான ஒரு பொருளாகவே திகழ்கிறது. கையில் மருதாணி வைத்துக் கொண்டாலும் சரி, பூஜைக்கு மருதாணியை பயன்படுத்தினாலும் சரி, அதனால் நமக்கு பலவிதமான மகத்துவங்கள் இருக்கின்றன.
அப்படிப்பட்ட மருதாணி செடியை நம்முடைய வீட்டில் வைத்து நாம் வளர்க்க வேண்டும். எப்படி துளசி செடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல் மருதாணி செடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தண்ணீரால் மருதாணி செடிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். கடைசியாக சிறிதளவு பன்னீரை ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். மருதாணி செடிக்கு மஞ்சள் குங்குமம் வைத்துவிட்டு உதிரிப் பூக்களை வைத்து ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.
இந்த செயல்களை செய்யும் பொழுது “ஓம் ரீங் ரீங் ஸ்வாகா” என்னும் மந்திரத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து கூறிக் கொண்டே செய்ய வேண்டும். இப்படி செய்து விட்டு உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மருதாணி செடியிடம் முறையிட வேண்டும். எந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் மருதாணி செடியை இந்த முறையில் வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய தரித்திரமும் வறுமையும் படிப்படியாக விலகும், நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: ஆவணி மூலம் சிறப்பு வழிபாடு
மரங்களுக்கும் செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றி அதை முறையாக பராமரிப்பது ஒருவித சேவை. அதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீரும். அந்த வகையில் தெய்வம்சம் பொருந்திய செடியை நாம் வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அதன் உயிர் ஆற்றலால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.