நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கக்கூடியவர்கள் தான் மனிதர்கள். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். இந்த சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் நமக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று பணம் தான். பணம் என்பது நம்முடைய கையில் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு ரூபத்தில் மனவருத்தம் என்பது ஏற்படும். அதிலும் குறிப்பாக பணம் இல்லாமல் கடன் வாங்கி விட்டோம் என்றால் கூறவே வேண்டாம். நிம்மதி இழந்து, தூக்கத்தை இழந்து பலவிதமான முறைகளில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம். இந்த கஷ்டங்களை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடனற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ
பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வோம். மகாலட்சுமி தாயார் பலவிதமான பொருட்களில் நிறைந்திருக்கிறார்கள் என்றும் அந்த பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மகாலட்சுமியின் வசியம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தாந்திரீக பொருட்களுள் ஒரு பொருளை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம்.
மகாலஷ்மிக்கு மிகவும் விருப்பமான பழம் என்றால் அது மாதுளம் பழம் தான். மாதுளம் பழத்தை வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது அவளின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்த பழத் தோலை நாம் பயன்படுத்தி ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த பரிகாரத்தின் பலனால் பணவரவு என்பது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மாதுளம் பழத் தோலை எடுத்து நிழல் காய்ச்சலாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் ஒரு துண்டு மாதுளம் பழத்தோலை போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூளையும் போட்டு அதில் பச்சை கற்பூரத்தையும் இரண்டு துண்டுகள் வீதம் வைத்து நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் அந்த இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதன் மூலம் பணம் சேர ஆரம்பிக்கும். இந்த பொருட்களை மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ, புதிதாக மாற்றி வைத்து கொள்ள வேண்டும். இதை தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் இருக்கக்கூடிய கல்லாப்பெட்டியில் வைப்பதன் மூலம் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: சிவன் மற்றும் பெருமாளின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த தாந்திரீக பொருளை முழுமையாக பயன்படுத்தி மகாலட்சுமியின் அருளோடு பணவரவை அதிகரித்து கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.