- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉத்தியோகத்தடையை நீக்கும் விநாயகர் வழிபாடு

உத்தியோகத்தடையை நீக்கும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம். இன்றைய காலத்தில் வேலை செய்வது என்பது பெரிய விஷயமே கிடையாது. அந்த வேலையை எப்படி செய்கிறோம் எவ்வளவு நேரத்தில் செய்து முடிக்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாகவே திகழ்கிறது. கடினமாக உழைப்பதை விட புத்திசாலித்தனமாக உழைப்பது தான் இன்றைய காலகட்டத்தில் பலரும் விரும்பக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. ஒரு சிலருக்கு எவ்வளவு புத்திசாலித்தனம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கோ அல்லது அதை வெளிப்படுத்துவதால் ஏற்படக்கூடிய முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில் தடைகள் வந்து கொண்டிருக்கும். அந்த தடைகளை நீக்குவதற்கும், புத்திசாலித்தனமாக வேலை செய்வதற்கும் விநாயகர் பெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

உத்தியோகத்தடை நீக்க வழிபாடு

வேலை தொடர்பாக எந்த ஒரு வேண்டுதலை முன்வைப்பதாக இருந்தாலும் சூரிய பகவானிடம் முன்வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சூரிய பகவானின் மறு அம்சமாக தான் சிவபெருமான் திகழ்கிறார் என்பதால்தான் ஞாயிற்றுக்கிழமை சிவாலயத்தில் இருக்கக்கூடிய சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் வேலை தொடர்பான அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேறும். அப்படிப்பட்ட சிவாலயத்தில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது வேலையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். காரிய தடையை நீக்க கூடியவராக திகழ்பவர் விநாயகப் பெருமான் என்பதாலும் அதுவும் குறிப்பாக உத்தியோக காரியத்தை நீக்கக் கூடியவர் சிவாலயத்தில் இருக்கக்கூடிய விநாயகர் பெருமான் என்பதாலும் இந்த வழிபாட்டை நாம் சிவாலயத்தில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு செய்ய வேண்டும்.

- Advertisement -

நாம் செய்யக்கூடிய காரியத்தில் ஏற்படக்கூடிய தடைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர் கேது பகவான். கேது பகவானுக்குரிய தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அதனால் விநாயகப் பெருமானின் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். வேலை தொடர்பான தடைகள் நீங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை அஸ்வினி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு சூரிய ஹோரையில் சிவாலயத்திற்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.

அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணி சூரிய கோரை என்பதால் அந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது அருகம்புல், ஒன்பது தேங்காய் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் முதலில் நாம் விநாயகரை தான் வழிபாடு செய்வோம். அவ்வாறு விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை கூறி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்ற வேண்டும். பிறகு விநாயகப் பெருமானை ஒருமுறை வலம் வந்து உங்களுடைய வேலை தொடர்பான தடைகளை கூறி அது விரைவில் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு 9 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு வாங்கி சென்ற ஒன்பது தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வேலையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு விநாயகப் பெருமானின் அருளால் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு எப்பொழுதும் போல் மற்ற தெய்வங்களை வழிபாடு செய்து கொள்ளலாம். அதேபோல் தினமும் வீட்டில் விநாயகப் பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்து வழிபாடு செய்து வேண்டுதலை முன்வைக்க அந்த வேண்டுதலை விநாயகர் பெருமான் விரைவில் நிறைவேற்றுவார்.

இதையும் படிக்கலாமே: கடனற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ

புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு ஞானப்பழத்தை வென்ற விநாயகர் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது நாமும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வேலையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவோம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்