- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுன்னேற்றத்தை ஏற்படுத்தும் பௌர்ணமி தீபம்

முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பௌர்ணமி தீபம்

- Advertisement -

சிறு குழந்தையாக பிறந்ததிலிருந்து வயதாகி இறப்பது வரை நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு முன்னேற்றகரமான செயலை செய்து அதன் மூலம் நல்ல விதத்தில் முன்னேற வேண்டும். அதுதான் வளர்ச்சி என்று கூறப்படுகிறது. இது அனைவருக்கும் நடக்கிறது என்று கூற முடியாது. ஒரு சிலருக்கு நல்லவிதமான முன்னேற்றத்திற்கு பதிலாக மோசமான ஒரு ஏமாற்றமே ஏற்படும். இதன் மூலம் அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தவர்களும் மனக்கவலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஏற்ற வேண்டிய ஒரு பௌர்ணமி தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முன்னேற்றம் பெற தீபம்

ஆவணி மாதம் என்பது சூரிய பகவானுக்கு உரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பலரும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து சூரிய பகவானை வழிபாடு செய்வார்கள். இப்படி சூரிய பகவானுக்குரிய கிழமையில் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த பௌர்ணமி வருவது என்பது கூடுதல் சிறப்பை தரும். இந்த நாளில் நாம் மேற்கொள்ளக்கூடிய வழிபாடு சூரிய மற்றும் சந்திரன் அருளை பெறுவதற்கு உகந்த வழிபாடாகவே அமையும் .

- Advertisement -

இந்த தீபத்தை இன்று மதியம் 12 மணிக்குள் நம்முடைய நிலை வாசலில் ஏற்ற வேண்டும். ஒரு வேளை மதியம் 12 மணிக்குள் ஏற்ற இயலாதவர்கள் மாலை 5 மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஏற்ற வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எரிய வேண்டும் என்பதால் அதற்கேற்றார் போல் தீபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். முதலில் நிறைவாசலுக்கு வெளியே சுத்தம் செய்து மஞ்சளை ஏதாவது ஒருபுறம் மட்டும் தடவிக் கொள்ளுங்கள். அந்த மஞ்சளுக்கு மேல் அஷ்டலட்சுமிகளை குறிக்கும் விதமாக 8 இதழ்கள் கொண்ட தாமரைப்பூ கோலத்தை பச்சரிசி மாவினால் போட வேண்டும். தாமரைப்பூ கோலம் போட தெரியாது என்பவர்கள் ஸ்வஸ்திக் சின்னத்தையோ அல்லது மகாலட்சுமியின் பிசாசுர மந்திரம் ஆன ஸ்ரீம் என்னும் மந்திரத்தையோ எழுதலாம்.

அதற்கு மேல் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் வேப்பிலை கொத்துகளை வைக்க வேண்டும். அந்த வேப்பிலைக்கு மேல் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் இரண்டு அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு வெள்ளை நிற மலர்களை வைக்க வேண்டும். இதோடு இன்றைய தினம் சந்திர கிரகணம் என்பதால் தர்ப்பைப்புல் ஒரு சிறிய துண்டையும் வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு ஓம் ஸ்ரீம் மாத்ரே நமஹ என்னும் மந்திரத்தை முழுமனதோடு 54 அல்லது 108 முறை அந்த தீபத்தை பார்த்தவாறு கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்துவிட்டு உங்களுடைய அன்றாட வேலைகளை பார்த்துக் கொள்ளலாம். சுத்தமாக இருக்கக்கூடிய பெண்கள் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பெண்களால் ஏற்ற இயலவில்லை என்னும் பட்சத்தில் ஆண்களும் இந்த தீபத்தை ஏற்றலாம். தீபம் ஒரு மணி நேரம் எரிந்து முடித்த பிறகு அதை குளிர வைத்துவிட்டு பச்சரிசியை குருவிகளுக்கோ எறும்புகளுக்கோ அல்லது கோலமாவு தயார் செய்வதற்கோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தர்ப்பைப்புல் இன்று முழுவதும் நிலை வாசலிலேயே இருக்கட்டும். திங்கட்கிழமை காலையில் இதை கால்ப்படாத இடத்தில் எடுத்து போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே:புண்ணியத்தை சேர்க்கும் ஆவணி பௌர்ணமி பரிகாரம்

கிரகணத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்குவதோடு நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படுவதற்கு முழு மனதோடு பௌர்ணமி தினமான இன்று இந்த தீபத்தை ஏற்றுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்