- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 11-7-2025 மகாளய பட்சத்தில் வரும், மகா பரணி தீப வழிபாடு

நாளை 11-7-2025 மகாளய பட்சத்தில் வரும், மகா பரணி தீப வழிபாடு

- Advertisement -

முன்னோர்களுக்கு வழிபாடு செய்யக்கூடிய மகாளய பட்ச நாட்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த மகாளய பட்ச 15 நாட்களில் வரக்கூடிய, பரணி நட்சத்திர வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பரணி நட்சத்திரம் எமதர்மனுடைய நட்சத்திரம்.

மகாளய பட்சம் 15 நாளில் உங்களால் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும் சரி, இந்த மகாலய பட்ச நாளில் முன்னோர்களுக்கு இந்த ஒரு தீபா வழிபாட்டை, பரணி நட்சத்திரம் அன்று செய்வதன் மூலம் நம் குடும்பத்திற்கு பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பித்ரு தோஷம், முன்னோர்கள் சாபம் ஏதாவது இருந்தால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடவும் இந்த பரணி தீப வழிபாடு நமக்கு வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இந்த மகாபாரணி தீபம் எந்த நாளில், எந்த நேரத்தில் வருகிறது. தீபத்தை எப்படி ஏற்றலாம். இந்த நாளில் என்ன தானங்கள் செய்தால் சிறந்தது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்..

மகாளய பட்சம் பரணி நட்சத்திரம் வரும் நேரம்

11-9-2025 வியாழக்கிழமை மாலை 6:09 மணிக்கு இந்த பரணி நட்சத்திரம் பிறக்கிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி வரை இந்த பரணி நட்சத்திரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் மேற்கொள்வதுதான் சிறப்பு. ஆகவே வியாழக்கிழமை மாலை 6:09 மணிக்கு மேலாக இந்த தீபத்தை நீங்கள் வீட்டிலும் ஏற்றலாம் கோவிலிலும் ஏற்றலாம்.

- Advertisement -

பரணி தீபம் ஏற்றும் முறை

நீங்கள் தீபத்தை வீட்டில் ஏற்றுவதாக இருந்தால் நாளை வியாழக்கிழமை மாலை 6:10 மணிக்கு மேலாக நிலை வாசலில் பெரியதாக ஒரு மண் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய மறைந்த முன்னோர்களை எல்லாம் ஒரு நிமிடம் மனதிற்குள் கொண்டு வந்து வணங்கி, பிறகு வீட்டிற்குள் வரவேண்டும். இந்த தீபம் கிழக்கு திசை நோக்கி நிலை வாசலிலேயே எண்ணெய் தீரும் வரை எரியட்டும். எந்த தவறும் கிடையாது. வீட்டில் இந்த தீபத்தை ஏற்றுவது மூலம் எந்த பிரச்சனையும் இல்லை.

ஒருவேளை உங்களுக்கு இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுவதற்கு சங்கடமாக இருந்தால், விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது? உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவில் முருகனுக்கு கோவிலோ இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

- Advertisement -

பரணி தீபம் ஏற்றுவதன் மூலம் என்ன பலன்

இந்த பரணி தீபத்தை ஏற்றுவதன் மூலம் நம்முடைய வீட்டில் துர்மரணங்கள் நடக்காது. விபத்துக்கள் நடக்காது. வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கிய பிரச்சனை தீரும். உங்களுடைய வீட்டில் சிறுவயதிலேயே யாரேனும் இருந்திருந்தால் அவர்களை நினைத்து இந்த தீபத்தை ஏற்றினால் அவர்களது ஆத்மா சாந்தி அடையும். அவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை வந்து சேரும். இதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் மிக மிக சுலபமாக தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: இன்று சங்கடஹர சதுர்த்தி வெல்லம் பிள்ளையார் வழிபாடு

செய்ய வேண்டிய தானம்

தானத்திலேயே மிகச்சிறந்த தானம் அன்னதானம். யாராவது பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கு உங்கள் கைகளால் நாளை சாப்பாடு வாங்கி கொடுங்க. உங்களுக்கு முடியும் என்றால் வஸ்திர தானம், பருப்பு வகைகள் அரிசி இவைகளையும் தானமாக கொடுக்கலாம். மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்