இன்று முருகனுக்கு உகந்த சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. 12/9/2025 வெள்ளிக்கிழமை என்பதால் இன்று மகாலட்சுமியின் அனுகிரகமும், சுக்கிர பகவானின் அனுகிரகமும் சேர்ந்து இருக்கிறது. இந்த நன்னாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு, நம்முடைய பண கஷ்டத்தை தீர்த்து வைக்கும். கடன் சுமையை குறைக்கும். அந்த வழிபாட்டை பற்றிய விரிவான தகவலை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
முருகர் வழிபாடு
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் எல்லோர் வீட்டிலுமே மாலை நேரத்தில் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்ய பூஜை அறையை தயாராக வைத்திருப்போம். அந்த வெள்ளிக்கிழமை பூஜைையோடு சேர்த்து முருகப்பெருமானுக்கு இந்த சின்ன எளிய பரிகாரத்தையும் செய்து விடுங்கள்.
முடிந்தால் 6 மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு, தீபம் ஏற்றி முருகப்பெருமானிடம், மனமுருக பிரார்த்தனை வைக்க வேண்டும். சிவப்பு நிற திரியில் தீபம் ஏற்றுவது மிக மிக முக்கியம். குறிப்பாக உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என்று இந்த வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள்.
முடிந்தால் முருகனுக்கு 6 செவ்வாழைப்பழங்கள் நெய்வேதியமாக வைத்து, இந்த பூஜை முடிந்தவுடன் அந்த செவ்வாழைப்பழங்களை, இயலாதவர்களுக்கு உங்கள் கையாலேயே தானம் கொடுக்கும் பட்சத்தில், உங்கள் கடன் சுமை விரைவில் தீரும் என்பது நம்பிக்கை.
விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து, முருகப்பெருமான் முன்பு இந்த குறிப்பிட்ட மந்திரத்தை இன்று 6 முறை சொல்லுங்கள். இன்று இந்த பூஜையில், இந்த மந்திரத்தை உச்சரிப்பது ஆயிரம் மடங்கு பலனை கொண்டு வந்து சேர்க்கும்.
முருகன் மந்திரம்
ஓம் ஷம் சரவண பவ
முருகன் வழிபாட்டை மனநிறைவோடு செய்து, மந்திரத்தை உச்சரித்து தீப தூப ஆராதனை காண்பித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாட்டை முடித்த பிறகு தான், அந்த வாழைப்பழ பிரசாதத்தை தானம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: தன வரவை அதிகரிக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு
இந்த எளிமையான வழிபாட்டை இந்த நன்னாளில் எவர் ஒருவர் நம்பிக்கையோடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு முருகர் ஆசீர்வாதம் கிடைக்கும். மகாலட்சுமி அனுகிரகம் கிடைக்கும். சுக்கிர பகவானின் ஆசியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பரிபூரணமாக எல்லாதெய்வங்களின் ஆசீர்வாதத்தையும் பெற்று உங்கள் குடும்பம் சுபிட்சம் அடைய வேண்டிக்கொண்டு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.