தனம் தானியம் போன்ற 16 வகை செல்வங்களையும் தன்னகத்தை கொண்டு திகழக்கூடிய ஒரு தெய்வமாக இருப்பவள் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாருக்குரிய தினமாக தான் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்குரிய நாளாகவும் சுக்கிர பகவானின் அதிதேவதை மகாலட்சுமி தாயார் திகழ்கிறார்கள். பலரும் தன வரவு ஏற்படாதால்தான் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய தன வரவை ஏற்படுத்த செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தன வரவை அதிகரிக்கும் வழிபாடு
மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு பலவிதமான சிறப்பு மிகுந்த நாட்கள் இருந்தாலும் வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்கிறது. பொதுவாகவே கடன் தொடர்பான பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு செவ்வாய் மற்றும் சந்திரன் பகவானால் பாதிப்புகள் என்பது ஏற்பட்டு இருக்கும். சந்திர பகவானின் சகோதரியாக தான் மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மேலும் சுக்கிர பகவானுக்குரிய அதி தேவதையாகவும் மகாலட்சுமி தாயார் திகழ்வதால் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது சந்திர பகவானின் அருளையும் சுக்கிர பகவானின் அருளையும் நம்மால் பெற முடியும்.
பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று காலையில் வரக்கூடிய 6 மணியிலிருந்து 7 மணிக்கு இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில் கடையிலிருந்து உப்பை வாங்கி வந்து சேர்க்க தன வரவு அதிகரிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் இரவு நேரத்தில் நிலவு வந்த பிறகு வரக்கூடிய சுக்கிர கோரையான 8 மணியிலிருந்து 9 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தாலும் மகாலட்சுமியின் அருளைப் பெற முடியும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வரக்கூடிய சுக்கிரஹோரையான 1 மணியிலிருந்து 2 மணிக்குள் தான் நாம் இந்த தீப வழிபாட்டை செய்யப் போகிறோம்.
மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய டம்ளரில் குடிக்கின்ற தண்ணீரை பிடித்து அதில் இரண்டு அல்லது மூன்று குங்குமப்பூவை போட்டு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு மகாலட்சுமி அஷ்டகத்தை இரண்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். மகாலட்சுமி அஷ்டகத்தை ஒரு முறை பாராயணம் செய்தால் சகல பாவங்கள் நீங்கும் என்றும் இரண்டு முறை பாராயணம் செய்தால் தன வரவு அதிகரிக்கும் என்றும் மூன்று முறை பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் என்றும் அந்த அஷ்டகத்திலேயே கூறப்பட்டிருக்கிறது.
மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபத்தை ஏற்றி வைத்து குங்குமப்பூ கலந்த தண்ணீரை நெய்வேத்தியமாக வைத்து மகாலட்சுமி அஷ்டகத்தை இரண்டு முறை படித்து பச்சை கற்பூரத்தால் தீபாரதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்து பிறகு அதே சுக்கிர ஹோரை நிறைவடைவதற்குள் குங்குமப்பூ கலந்த தண்ணீரை எடுத்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு தனவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை முற்றிலும் தீரும்.
இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் ஆவணி கிருத்திகை தீப வழிபாடு
சக்தி வாய்ந்த அதே சமயம் எளிமையான இந்த வழிபாட்டை முழுமனதோடு வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருளால் தன வரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.