- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 14-9-2025 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி.

நாளை 14-9-2025 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி.

- Advertisement -

வாழ்க்கையில் அடி மேல் அடி விழுகிறது. இடி மேல் இடி விழுகிறது. எந்த முயற்சி செய்தாலும் அதில் தோல்வி. வியாபாரத்தில் லாபம் இல்லை. மேலும் மேலும் கடன் வாங்கி நஷ்டம் அடைந்தது தான் மிச்சம். குடும்பத்தில் சண்டை, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை.

நோய் நொடி தொந்தரவு இப்படி உங்கள் வாழ்க்கையை நிலைகுலைக்க செய்யும் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, அந்த கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால், நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவரை வழிபாடு செய்து பாருங்கள். அத்தனை துன்பங்களும் உங்களை கண்டு ஒதுங்கி நிற்கும். நாளை அப்படி என்ன விசேஷம். இந்த தேய்பிறை அஷ்டமிக்கு உண்டான மகத்துவம் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ச்சி தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

14-9-2025 அஷ்டமி திதியின் சிறப்பு

இந்த செப்டம்பர் மாதத்தில் வந்திருக்கக்கூடிய அஷ்டமி திதியை மத்தியாஷ்டமி என்று சொல்லுவார்கள். மகாளய பட்சத்தில் வந்திருக்கும் மத்திய பகுதி இது. நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் அஷ்டமி.  மகாளய பட்சத்தில் நடு நாளில் இந்த அஷ்டமி திதி வந்திருப்பதால் இதை மத்தியாஷ்டமி என்று சொல்லுகிறார்கள்.

இந்த மகாளய பட்சத்தில் மற்ற நாட்களில் உங்களால் முன்னோர்கள் வழிபாடு செய்ய முடியவில்லை, திதி தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும் சரி, நாளைய தினம் நீங்கள் முன்னோர்களை மனதார நினைத்து, வீட்டில் விளக்கு ஏற்றி, மறைந்த முன்னோர்களை எல்லாம் ஒரு நிமிடம் மனதில் நினைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

திதி தர்ப்பணம் முறைகளை நாளைய தினம் கொடுத்தால் முன்னோர்கள் சாபம் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது. பித்ருகளுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் காலபைரவர். அவருக்கு உரிய இந்த நன்னாளில், பித்ரு காரகனான சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையில், முன்னோர்களை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். இது முதல் விஷயம்.

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை 14-9-2025 காலை 9:16 மணி முதல் அஷ்டமி திதி துவங்குகிறது. மறுநாள் திங்கட்கிழமை காலை 7:00 மணி வரை இந்த அஷ்டமி திதி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் பைரவர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று, பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் விசேஷமாக நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டாலே உங்களுடைய பாவங்களில் பாதி முடிந்துவிடும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போகும்.

- Advertisement -

அந்த பைரவருக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுத்து, செவ்வாழை பழங்களை வாங்கி கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய மீதி கஷ்டம் விலகும். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். பைரவரை 9 முறை வலம் வந்து என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே நடக்கும். காலத்தால் கொடுக்கக்கூடிய கஷ்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய பைரவரின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் இது இரண்டாவது விஷயம்.

கடன் சுமை தீர பைரவர் பரிகாரம்

கடன், வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ஒரு விஷயம். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்த தேய்பிறை நிலவு போல என்னுடைய கடனும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடாத என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.

உள்ளங்கைகளில் 8 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். பைரவர் சன்னிதானத்தில் பைரவரை பார்த்தவாறு நில்லுங்கள். முதலில் முன்னோர்களை மனதில் நினைத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு காலபைரவரை மனதார நினைத்து உங்கள் கடன் கஷ்டத்தை கால பைரவரிடம் சொல்லுங்கள். இன்றோடு என்னுடைய கடன் தொல்லை என்னை விட்டு விலக வேண்டும்.

நான் என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னித்து விடை என்று பிரபஞ்சத்திடமும் மன்னிப்பு கேட்டு விடுங்கள். கால பைரவரை 8 முறை வலம் வந்துவிட்டு, கோவிலில் இருந்து வெளியே வந்து விடுங்கள். கையில் 8 மிளகு இப்போது இருக்கிறது. கோவில் நிலை வாசலில் நின்று கொண்டு, கோவிலை விட்டு வெளியில் வந்த பிறகு எட்டு மிளகுகளையும் எட்டு திசையில் தூக்கி எறிந்து விட்டு திரும்பி பார்க்காமல் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்.

நாளைய தினம் எவரொருவர் பைரவர் சன்னிதானத்தில் நின்று ராகு கால நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ, அவர்களுடைய துன்பம் அந்த நிமிடமே விலகும் என்பது நம்பிக்கை. மிக மிக எளிய பரிகாரம் இது. கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள், உங்கள் வீட்டு பூஜை அறையிலையே மிளகை வைத்து, கையில் எடுத்து பைரவரை நினைத்து மேல்சொன்னபடி வேண்டிக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்து, எட்டு திசையிலும் இந்த மிளகாய் தூக்கி எறிந்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பில் புரள பெருமாள் மந்திரம்

உங்களை பிடித்த பீடை கடன் நாளையோடு உங்களை விட்டு விலகும் என்ற நம்பிக்கையோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்