- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ செழிப்பில் புரள பெருமாள் மந்திரம்

செல்வ செழிப்பில் புரள பெருமாள் மந்திரம்

- Advertisement -

இன்று சனிக்கிழமை 13/9/2025. இன்னும் ஒரு சில நாட்களில் புரட்டாசி 1ஆம் தேதி பெருமாளுக்கு உரிய மாதம் பிறக்கவிருக்கிறது. வரக்கூடிய அடுத்த சனிக்கிழமை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. வரும் 17ஆம் தேதி புரட்டாசி முதல் தேதி. இந்த நாளை வரவேற்பதற்கு நாம் தயாராக வேண்டும் அல்லவா. உங்களுடைய பண கஷ்டங்கள் தீரவும், கடன் சுமை குறையவும், அந்த திருப்பதி பெருமாளை வரும் புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் வழிபாடு செய்ய துவங்குங்கள்.

அதற்கான முயற்சியை இந்த சனிக்கிழமையே துவங்கி விடலாம். அந்த வகையில் இன்றைய தினம் பெருமாள் கோவிலிலோ அல்லது உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாள் முன்போ இந்த மந்திரத்தை மனதார உச்சரியுங்கள். உங்களுடைய பணக்கஷ்டம் தீர அந்த திருப்பதி பெருமாள் உங்கள் வீட்டிற்கே வருகை தருவார். அது என்ன மந்திரம் ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

இன்று மாலை 6:00 மணி அளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பஞ்சபாத்திர தண்ணீரில் கொஞ்சமாக துளசி இலை, பச்சை கற்பூரம் போட்டுக் கொள்ளுங்கள். வாசம் நிறைந்த ஊதுவத்தி கொஞ்சம் ஏற்றி வைத்து விடுங்கள். பெருமாளையும் மகாலட்சுமியையும் மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள்.

அந்த பெருமாளின் நெஞ்சில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமியின் கருணை பார்வை நம் மேல் விழ வேண்டும் என்றால், புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுடன் சேர்ந்து மகாலட்சுமியையும் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப அவசியம்.

- Advertisement -

பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பு, உங்களுடைய பிரார்த்தனையை மனமுருக சொல்லுங்கள். என்ன பண கஷ்டம் இருக்கிறது, இந்த கடன் சுமையை சீக்கிரமாக அடைக்க வேண்டும், என்று நினைக்கிறீர்களோ, அதைப்பற்றிய கோரிக்கையை பெருமாளிடமும் மகாலட்சுமி தாயாரிடமும் வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் மூன்று முறை சொன்னாலும் போதும். அதிகபட்சம் 27 முறை, 108 முறை உங்கள் நேரத்திற்கு தகுந்தபடி எத்தனை முறை சொன்னாலும் தவறு கிடையாது.

பெருமாள் மந்திரம்

ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி!
ஓம் திருமகள் மணாளா போற்றி!
ஓம் ஹரி ஹரி நமோ நாராயணா போற்றி !

- Advertisement -

இவ்வளவுதான் மந்திரம். திருப்பதி பெருமாளை கண்முன்னே கொண்டு வந்து இந்த மூன்று வரி மந்திரங்களை உச்சரிக்கும் போது உங்கள் வாழ்வில் சீக்கிரம் செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தரக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அமையும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் செய்யும் வேலையில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். சம்பள உயர்வு உண்டாகும். இன்னும் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை நலனையும் கொடுக்க பெருமாள் காத்துக் கொண்டிருக்கிறார். புரட்டாசி மாதம் பூலோகத்தில் வாழும் பெருமாள் பக்தர்கள் கோவிந்தா என்ற வார்த்தையை சொல்ல மாட்டார்களா, ஓடிவந்து அந்த வீட்டில் அமர மாட்டுமா என்று காத்துக் கொண்டிருக்கும் பெருமாளை வர வைக்க தயாராகுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி மந்திரம்

இந்த புரட்டாசி மாதம் உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக புரட்டிப் போடும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்