- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் குலதெய்வ வழிபாடு

பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் குலதெய்வ வழிபாடு

- Advertisement -

இந்த உலகத்தில் பணம் ஒன்று தான் மிகவும் பிரதானமாக திகழ்கிறது. மனிதர்கள் மனத்தை பார்ப்பதைவிட பணத்தை தான் அதிக அளவில் பார்த்து அதற்கேற்றாற்போல் தான் மதிப்பையும் மரியாதையும் தருகிறார்கள். அந்த வகையில் பணத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் இருக்கிறது. எந்த ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த செயலுக்கு பின்பக்கமாக பணம் என்பது கண்டிப்பான ஒன்றாகவே இருக்கும். அப்படிப்பட்ட பணத்தை நாம் பெறுவதற்கும், பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கும், பணம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கும் குலதெய்வ ஆலயத்தில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வேண்டுதலை நிறைவேற்றும் வழிபாடு

பொதுவாகவே பணம் தொடர்பான வேண்டுதல்கள் என்றால் நாம் மகாலட்சுமி தாயாரை தான் வழிபாடு செய்வோம். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளால் நமக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். இருப்பினும் மகாலட்சுமியின் அருளை நாம் பெற வேண்டும் என்றால் முதலில் குலதெய்வத்தின் அருள் என்பது நமக்கு வேண்டும். அதனால் முதலில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு விட்டு பிறகு மகாலட்சுமியின் வழிபாட்டை செய்து பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்குரிய முயற்சிகளை நாம் செய்யும்பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து நம்முடைய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

அந்த வகையில் நம்முடைய இந்த வழிபாட்டை குலதெய்வ கோவிலிலும் செய்யலாம் இஷ்ட தெய்வ கோவிலிலும் செய்யலாம். இதற்கு நமக்கு இரண்டே இரண்டு மண் விளக்கு அதாவது அகல் விளக்கு இருந்தால் போதும். தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலேயே நம்முடைய பணம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறும். அதிலும் குறிப்பாக கடன் பிரச்சினை தீருவதற்கு இது மிகவும் சிறப்பு மிகுந்த ஒன்றாக திகழ்கிறது.

ஒரு சிலருக்கு தங்களுடைய பணம் பிறரிடம் இருக்கும், அது வந்துவிட்டால் அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்துமே தீர்ந்துவிடும் என்று நினைப்பார்கள். ஆனால் அது வராமல் தடைப்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய குலதெய்வ அல்லது இஷ்ட தெய்வ கோவிலில் இரண்டு அகல் விளக்கில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி மற்றும் தாமரைத்தண்டு திரியை ஒன்றாக இணைத்து போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது தங்களின் பெயரில் அர்ச்சனை செய்வது கூடுதல் சிறப்பை தரும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே நமக்கு வர வேண்டிய பணம் நம்மை வந்து சேரும். அதன் மூலம் நம்முடைய பண பிரச்சினைகள் தீரும்.

- Advertisement -

ஒருவேளை நாம் யாரிடமும் பணத்தை கொடுத்து வைக்கவில்லை, பணவரவிற்கு எந்தவித வழியும் இல்லை, நாம் சம்பாதிக்கிற பணம் மட்டும்தான் நமக்கு வரும் என்று இருப்பவர்கள் அவர்களுடைய பண பிரச்சினை தீர வேண்டும் என்றால் இதே போல் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வ ஆலயத்திற்கு சென்று இரண்டு அகல் விளக்கில் சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி மற்றும் தாமரை தண்டு திரியை ஒன்றாக இணைத்து போட்டு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் சம்பாதிக்க கூடிய சம்பாத்தியம் அதிகரித்து அதன் மூலம் அவர்களுடைய பணப்பிரச்சினைகள் தீரும்.

தங்களுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிக் கொண்டு இருப்பவர்களை பார்த்து பிறர் அவர்களிடம் இருந்து பணத்தை கறக்க வேண்டும் என்பதற்காக முயற்சிகளை செய்வார்கள். அது நமக்கு தெரிந்தும் நம்மால் அவர்களை எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் இஷ்ட தெய்வ அல்லது குலதெய்வ ஆலயத்தில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய எதிரிகளால் ஏற்படக்கூடிய எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் காணாமல் போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு

இன்றைய காலகட்டத்தில் பணத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தான் அதிகமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நம்முடைய குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் இணைத்து இந்த முறையில் வழிபாடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்