- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாக

மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாக

- Advertisement -

ஒருவர் மனநிம்மதியுடன் வாழ வேண்டும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றால் அவருடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும், அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாக வேண்டும், தொட்ட காரியங்களில் வெற்றிகள் ஏற்பட வேண்டும், நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும், இப்படி கூறிக் கொண்டே செல்லலாம். இவை அனைத்துமே ஒருசேர தந்து மனமகிழ்ச்சியுடன் வாழ வைப்பதற்கு உதவக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் தான் காக்கும் கடவுளான பெருமாள். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான அர்ச்சனை நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்கி மன நிம்மதியை தரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாக

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றாலும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றாலும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றாலும் நாம் பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு புதன்கிழமையும், சனிக்கிழமையும் உகந்த கிழமைகளாகவும் ஏகாதசி திதி உகந்த திதியாகவும் கருதப்படுவதோடு, பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதமும், மார்கழி மாதமும் மிகவும் விசேஷமான மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த நாளில் நாம் பெருமாளுக்கு உகந்த பொருளை வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்யும்பொழுது அவரின் அருளை நம்மால் விரைவிலேயே பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு அர்ச்சனை வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை புரட்டாசி மாதம் முடிவதற்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். விருப்பம் இருப்பவர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் செய்யலாம். சனிக்கிழமை தோறும் செய்யலாம். இந்த அர்ச்சனைக்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் தாமரை மணி. நாட்டு மருந்து கடைகளில் தாமரை மணி என்பது கிடைக்கும். 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் வாங்கி அதை பன்னீரில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அவருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மஞ்சள் நிற லட்டு, பூந்தி, சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றவை சிறப்பான நெய்வேத்தியம் ஆகும்.

பிறகு இந்த தாமரை மணியை ஒவ்வொன்றாக எடுத்து “ஓம் கேசவாய நமஹ, ஓம் கோவிந்தாய நமஹ, ஓம் நாராயணாய நமஹ” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு மணியையும் மூன்று மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து கூறி பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். மறுபடியும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது இந்த தாமரை மணிகளை பன்னீரில் சுத்தம் செய்து விட்டு அர்ச்சனை செய்யலாம். மகாலட்சுமி வீற்றிருக்க கூடிய தாமரை மலரில் இருந்து கிடைக்கக்கூடிய தாமரை மணியை பயன்படுத்தி இந்த முறையில் பெருமாளின் நாமத்தை கூறி அர்ச்சனை செய்பவர்களுக்கு அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி மனநிம்மதி உண்டாக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த அர்ச்சனையை வீட்டில் பெருமாளுக்கு நாம் செய்வதன் மூலம் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்