- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தை ஈர்க்கும் சுவிட்ச் வோர்ட்

பணத்தை ஈர்க்கும் சுவிட்ச் வோர்ட்

- Advertisement -

18-9-2025 இன்று வியாழக்கிழமை. அப்படி என்ன அதிசயமான நாள்? உங்களுடைய பண பிரச்சனையை தீர்த்து வைக்க இந்த நாளுக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம் என்ன. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால், இன்று இரவு தூங்குவதற்கு முன்பு நீங்கள் உச்சரிக்க வேண்டிய அந்த சுவிட்ச்வார்டு என்ன இதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

18-9-2025 இன்றைய நாளுக்கான சிறப்பு

இன்றைய தேதியின் கூட்டுத்தொகை 9. இந்த மாதம் 9வது மாதம். வருடத்தின் கூட்டுத்தொகை 9. ஆக மொத்தம் 999 ஒன்றாக சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்தப் பிரபஞ்ச வசிய நாளில், உங்கள் பிரச்சனைகள் தீர, வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைக்கலாம். பணக்கஷ்டம் என்று மட்டும் கிடையாது.

- Advertisement -

உங்களுக்கு வாழ்க்கையில் வேறு ஏதாவது கஷ்டம் இருந்தால் கூட அந்த கஷ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் வேண்டுதல் வைக்கலாம். இன்று நீங்கள் என்ன வேண்டினாலும் அதை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு சீக்கிரம் கொடுக்கும்.

இப்பேற்பட்ட சக்தி வாய்ந்த இந்த நாளில் குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு ஐடியாவை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த முக்கால்வாசி மக்களுக்கு பணம் தானே பிரச்சினையாக இருக்கிறது. அதுக்காக தாங்க இந்த பதிவு.

- Advertisement -

பணப் பிரச்சனை தீர ஸ்விச் வோர்ட்

எங்கேயோ உங்களுடைய பணம் தேங்கி நிற்கிறது. அல்லது யாரிடமோ கடனை கொடுத்துவிட்டு அந்த பணம் உங்கள் கையில் வராமல், நீங்கள் சிரமத்தில் இருக்கிறீர்கள், அல்லது வருமானத்தில் தடை இருக்கிறது, வீட்டிற்குள் பணம் நுழைய தயங்குகிறது எனும் பட்சத்தில் நீங்கள் ஏதோ ஒரு பண பிரச்சனையில் சிக்கி இருப்பீர்கள்.

அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர இந்த மந்திர வார்த்தையை இன்று இரவு தூங்குவதற்கு முன்பு 9 முறை சொல்லிவிட்டு தூங்குங்கள். உங்களுக்கு தற்போது இருக்கக்கூடிய பண தடை விலகும் அல்லது உங்களுக்கு எதிர்காலத்தில் எவ்வளவு பணம் தேவையோ அதை இந்த பிரபஞ்சத்திலும் கேட்டும் இந்த மந்திர வார்த்தையை சொல்லலாம்.

- Advertisement -

இரவு தூங்க செல்வதற்கு முன்பு நீங்கள் படிக்கின்ற இடத்திற்கு பக்கத்திலேயே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கிழக்கு பார்த்த அமர்ந்து கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் 1 ரூபாய் நாணயம் அல்லது 5 ரூபாய் நாணயத்தை வைத்து கண்களை மூடிக்கொள்ளுங்கள். உங்கள் கண் முன்பு முழுவதும் நிறைய பணம் தெரிய வேண்டும். மன கண்களால் பணத்தை பார்க்க வேண்டும். “Yes Amazing Jackpot” இந்த வார்த்தையை 9 முறை சொல்லலாம். உங்களால் முடிந்தால் 999 முறை இந்த வார்த்தையை சொன்னாலும் தவறு கிடையாது.

மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு கையில் இருக்கும் நாணயத்தை தலையணைக்க அடியில் வைத்து தூங்குங்கள். அடுத்த ஒன்பது நாளில் உங்கள் பண பிரச்சனை தீர்ந்திருக்கும். அந்த தலையணைக்கு அடியில் வைத்த ரூபாயை எடுத்து கோவில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். அடுத்து 9 நாளும் இதேபோல பரிகாரத்தை தூங்கும் போது செய்யலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: மகாளய பட்சத்தில் கடைசி 3 நாள் பரிகாரம்

நேரம் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். 9 நாட்களில் உங்கள் பண தேவை பூர்த்தி அடைய, 9 நாளில் உங்களுடைய பண பிரச்சனை தீர, இந்த பரிகாரமும் இந்த ஸ்விச் வோர்டும் நிச்சயம் கைகொடுக்கும் இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்