- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி முதல் சனிக்கிழமை மாவிளக்கு தீப வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமை மாவிளக்கு தீப வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதம் என்பதே பெருமாளுக்கு உரிய மாதம் என்றும் இந்த புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவத்தை தவித்துவிட்டு பெருமாளை நினைத்து விரதம் இருப்பார்கள் என்றும் அதிலும் குறிப்பாக சனிக்கிழமையில் பெருமாளுக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வீட்டிலேயே செய்து வைத்து தளிரு போட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டிய மாவிளக்கு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

திருப்பதி ஏழுமலையானுக்குரிய பிரம்மோற்சவம் நடைபெறக்கூடிய மாதமாக திகழ்வதுதான் புரட்டாசி மாதம். புரட்டாசி மாதத்தில் நம்மால் இயலும் பட்சத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபாடு செய்ய வேண்டும். அனைவராலும் திருப்பதிக்கு செல்ல இயலாது என்பதால் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். மேலும் பெருமாளை நம்முடைய வீட்டிற்க்கே அழைத்து அவருக்கு பிடித்த பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வதன் மூலம் பெருமாளே நம் வீடு தேடி வருவார் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் புரட்டாசி மாத சனிக்கிழமை தளிர் போடும் வழக்கம் என்பது ஏற்பட்டது. இதோடு சேர்த்து பெருமாளுக்கு பிடித்தமான மாவிளக்கு தீபத்தையும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் தளிர் போட உகந்த நேரமாக காலை 7:45 மணியிலிருந்து 8:45 மணியும் 10:45 மணியிலிருந்து 11:45 மணியும் திகழ்கிறது. மேலும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு, செய்வதற்கு பிரம்ம முகூர்த்த நேரமும் காலை 7:45ல் இருந்து 8:45 மணியும், காலை 10:45ல் இருந்து 11:45 மணியும் மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணி வரையும் சிறப்பு மிகுந்த நேரங்களாக கருதப்படுகின்றன. மேல் சொன்ன இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து நாம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

மாவிளக்கு பூஜை செய்வதற்கு பச்சரிசி மாவை தயார் செய்து கொள்ளுங்கள். அதனுடன் அச்சு வெல்லம், கருப்பு எள்ளு இவற்றை கலந்து மாவிளக்காக தயார் செய்து ஒரு வாழை இலையில் வைக்க வேண்டும். நம்முடைய விருப்பத்தை பொறுத்தது ஒன்று இரண்டு மூன்று என்று எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் மாவிளக்கை தயார் செய்து தீபம் ஏற்றலாம். மா விளக்கிற்கு நான்கு புறங்களிலும் குங்குமம் வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்தை பெருமாளின் படத்திற்கு முன்பாக ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பெருமாளின் படத்திற்கு துளசி மாலை, மஞ்சள் நிற மலர்களால் மாலை போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த மாவிளக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து நெய்வேத்தியமாக பால்பாயாசம், உளுந்த வடை, சர்க்கரை பொங்கல், துளசி தீர்த்தம் போன்றவற்றை வைக்கலாம். தளிர் போடும் வழக்கம் இருப்பவர்கள் தளிர் போடுவதற்காக தயார் செய்த பொருட்களை அதில் வைக்கலாம். முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து தீபத்திற்கு முன்பாக வைத்து அவருக்கு உதிரி பூக்களை வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

பிறகு பெருமாளை வழிபாடு செய்வதற்கு வாசனை மிகுந்த மலர்களையும் துளசி இலைகளையும் தயாராக வைத்துக்கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை கூறி பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். அன்றைய தினம் தங்களால் இயலும் பட்சத்தில் பிறருக்கு அன்னதானம் செய்வது நல்ல பலனை தரும். சனி தோஷத்தை நீக்கும். மேலும் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதும் நல்ல பலனை தரும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ வெங்கடேசாய “

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யத்தை தரும் வாசல் கால் பூஜை

திருப்பதி ஏழுமலையானை மனதார நினைத்து வீட்டிலேயே இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் ஏழுமலையானின் அருளால் ஆனந்தமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்