- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்யத்தை தரும் வாசல் கால் பூஜை

ஐஸ்வர்யத்தை தரும் வாசல் கால் பூஜை

- Advertisement -

நாம் வாழக்கூடிய வீடானது கோவிலுக்கு சமமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வீட்டில் எந்த வித தீய சக்திகளும் இல்லாமல் தெய்வ சக்தி இருந்தால்தான் அந்த வீட்டில் வாழக்கூடிய நபர்கள் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள். அதை தவிர்த்து விட்டு தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றலோ இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கக்கூடிய யாராலும் நிம்மதியாக வாழ முடியாது. அப்படி வீட்டில் வாழக்கூடிய நபர்கள் நிம்மதியாக வாழவும் வீடே கோவிலாக திகழவும் செவ்வாய் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஐஸ்வர்யத்தை தரும் பூஜை

ஒவ்வொரு வீட்டிலும் தெய்வ அம்சம் பொருந்திய சில பொருட்கள் இருக்கும். அதை சரியாக கண்டறிந்து முறையாக பராமரித்தாலே வீட்டில் எந்தவித எதிர்மறை ஆற்றலோ தீய சக்திகளோ வருவதற்குரிய வாய்ப்புகளே இருக்காது. அதை பின்பற்றுவதோடு மிகவும் எளிமையான முறையில் ஒரு சில பூஜைகளை நாம் செய்யும் பொழுது அந்த வீடு தெய்வம் குடியிருக்கும் கோவிலாகவே திகழும். அப்படிப்பட்ட ஒரு பூஜையைப் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பூஜையை செவ்வாய், வெள்ளி கிழமையில் தான் செய்ய வேண்டும். பொதுவாகவே ஒவ்வொருவருடைய வீடு தேடியும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தெய்வங்கள் வருவார்கள். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க தெய்வமாக திகழக் கூடியவர்கள் அஷ்டலட்சுமிகளும், குலதெய்வமும் தான். நம் வீட்டை தேடி தினமும் காலையில் அஷ்டலட்சுமிகளும் குலதெய்வமும் வருவார்கள் என்றும் அந்த நேரத்தில் நாம் முறையாக சுத்தபத்தமாக இருந்து பூஜை செய்யும் பொழுது அவர்கள் நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் நம்முடைய வீட்டின் நிலை வாசலில் தான் அஷ்டலட்சுமிகளும் குலதெய்வமும் வீற்றிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு நம்முடைய நிலை வாசலை சுத்தமாக வைத்து பராமரித்து பூஜை செய்து வருகிறோமோ அதற்கேற்றார் போல் அஷ்டலட்சுமிகளின் அருளும் குல தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

நாம் ஆலயங்களுக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருப்போம். அனைத்து ஆலயத்திலும் கருவறைக்கு செல்வதற்கு முன்பாக இருக்கக்கூடிய நிலை வாசலின் மேலே கஜலட்சுமியின் உருவ சிலை என்பது இருக்கும். ஆலயத்திற்கு லட்சுமி கடாட்சம் வேண்டும் என்பதற்காக கிரகலட்சுமி நிலை வாசலில் வைத்திருக்கிறார்கள் என்னும் பட்சத்தில் நம்முடைய வீட்டிலும் நாம் அதே வழிமுறையை பின்பற்றும் பொழுது நமக்கும் லஷ்மி கடாட்சம் என்பது கிடைக்கும் அல்லவா? அதனால் சொந்த வீடாக இருந்தாலும் சரி வாடகை வீடாக இருந்தாலும் சரி நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு மேலே அஷ்டலட்சுமிகளின் படத்தையோ அல்லது சிலையையோ வைக்க வேண்டும். அதேபோல் அஷ்டலஷ்மிகளுக்கு அருகில் தாமரை மலரில் வீற்று இருப்பது போல் விநாயகரின் படத்தை வைக்க வேண்டும். வேறு எந்த தெய்வப்படத்தையும் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

- Advertisement -

இவர்கள் இருவரின் படத்தை மட்டும் வைத்துவிட்டு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு எளிமையான பூஜையை செய்ய வேண்டும். இந்த பூஜையை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் செய்யலாம், மாலை 6:00 மணிக்கு மேலும் செய்யலாம். அந்த இடத்தை சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு நிலைவாசலில் தீபம் ஏற்றி வைத்து அதற்கு முன் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். நிறை வாசலின் இரண்டு புறங்களிலும் மலர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டிக் கொள்ளுங்கள்.

பிறகு உதிரிப்பூக்களை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்து முழு மனதோடு அஷ்ட லட்சுமிகளின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்றும் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொண்டு நிலை வாசலில் மலர்களை சமர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். கற்பூர தீப தூப ஆராத்தி காட்டும் பொழுது மணி அடித்துக்கொண்டு காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் யார் ஒருவர் நிலை வாசருக்கு பூஜை செய்கிறார்களோ அவர்களுடைய வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே: சுக்ர யோகத்தை தரும் சுக்கிர பிரதோஷம்

மிகவும் எளிமையான இந்த பூஜையை முழுமனதோடு வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் செய்வதன் மூலம் அந்த வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்