- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு

- Advertisement -

நவராத்திரி தொடங்கி வெற்றிகரமாக இரண்டு நாட்கள் நிறைவடைந்து விட்டு மூன்றாவது நாளில் இருக்கிறோம். இந்த மூன்றாவது நாள் நாம் நம்முடைய வீட்டில் எப்பொழுதும் போல் நவராத்திரி வழிபாட்டை செய்வோம். அவ்வாறு செய்யும்பொழுது வாராகி அம்மனாக அம்மனை பாவித்து நாம் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய குடும்பத்திற்கே ஒரு பாதுகாப்பு கவசமாக அமையும். மேலும் நம்முடைய எதிரிகள் மற்றும் நம் கூடவே இருந்து குழிப்பறிக்கக் கூடிய துரோகிகளும் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்மனை ஒவ்வொரு விதமான அம்மனாகவும் ஒவ்வொரு விதமான துர்கையாகவும் பாவித்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். அந்த வகையில் நவராத்திரியின் மூன்றாவது நாளான செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி புதன்கிழமை அன்று அம்மனை வாராகி அம்மனாகவும், துர்க்கையை சந்திர காந்தாவாகவும் வழிபாடு செய்ய வேண்டும். இவர்களை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் நம்மை விட்டு விலகுவதோடு நம் கண்ணுக்குத் தெரியாமல் நம் உடனையே இருந்து நம்மை கஷ்டத்திற்கு ஆளாக்கக் கூடிய துரோகிகளும் நம்மை விட்டு விலகுவார்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். கலசத்திற்கு நீல நிற துணியை பயன்படுத்தி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு நீல நிற துணியை தாம்பாளத்துடன் வைத்து தருவது அதிகளவு பலனை தரும். இன்றைய தினத்தில் நெய்வேத்தியமாக வைக்க வேண்டிய பழமாக பலாப்பழம் திகழ்கிறது. இதோடு காராமணி சுண்டல், சர்க்கரை பொங்கல், வேகவைத்த கிழங்கு வகைகள் போன்றவற்றையும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

அம்மனை அலங்காரம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் சம்பங்கி, செண்பகம் மற்றும் துளசி இலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் கலசம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி அம்மன் படத்தை வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பாக மூன்று நெய் தீபங்களை கிழக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துக்கொண்டு பின்வரும் வாராகி அம்மனின் மந்திரமான “ஓம் நமோ வராகி தேவியே சரணம் சரணம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு “ஓம் ஸ்ரீ சந்திரகாந்தாயை நமஹ” என்னும் துர்க்கை அம்மனின் மந்திரத்தை 54 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு நெய்வேத்தியத்தையும் தாம்பூல செட்டையும் கொடுத்து ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் முடக்கத்தை நீக்கும் பரிகாரம்

நவராத்திரியின் மூன்றாம் நாள் வாராகி அம்மனை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்பவர்களுக்கு அவளே பாதுகாப்பு கவசமாக இருந்து நல்வழி காட்டுவாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்