- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருப்பதி பெருமாளுக்கு விருப்பமான மந்திரம்

திருப்பதி பெருமாளுக்கு விருப்பமான மந்திரம்

- Advertisement -

புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை போட்டு  கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை சொல்லி வீட்டிற்கு அழைப்பது வழக்கம். இந்த புரட்டாசி மாதம் மொத்தமாக நான்கு சனிக்கிழமைகள் இருக்கிறது. இன்று இரண்டாவது சனிக்கிழமை.

உங்களுடைய வீட்டில் தளிகை போடும் வழக்கம் இருந்தாலும் சரி, அல்லது தளிகை போடக்கூடிய வழக்கம் இல்லை என்றாலும் சரி, அந்த பெருமாளை வீட்டிற்குள் அழைத்து அமர வைக்க, ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

திருப்பதி பாலாஜிக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்யும் போது அந்த மூலஸ்தானத்தில் அடிக்கடி உச்சரிக்க கூடிய மந்திரங்களில் இதுவும் ஒன்று. இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த ஒருவரி மந்திரத்தை இன்று உங்கள் வீட்டில் சொல்வதன் மூலம், அந்த திருப்பதி பாலாஜி உங்கள் வீடு தேடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டு அந்த சக்தி வாய்ந்த மந்திரம் என்ன, அந்த மந்திரத்தை இன்று எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா.

பெருமாள் வழிபாடு

இன்று மாலை பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். கொஞ்சம் உதிரி புஷ்பங்கள் துளசி இலைகளை ஒரு தாம்பூல தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லும் போதும் புஷ்பங்களையும் துளசி இலைகளையும் எடுத்து பெருமாள் பாதத்தில் சமர்ப்பணம் செய்யுங்கள்.

- Advertisement -

குறைந்தபட்சம் 7 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். அதிகபட்சம் எத்தனை முறை சொன்னாலும் தவறு கிடையாது. இறுதியாக பெருமாளுக்கு பச்சை கற்பூரம் ஏற்றி தீபதூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த பச்சை கற்பூர வாசனை, துளசி வாசனையில், அந்த திருப்பதி வெங்கடாச பெருமாள் உங்கள் வீடு முழுவதும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள். நீங்க சொல்ல வேண்டிய ஒருவரி மந்திரம் இதோ.

திருப்பதி பெருமாள் மந்திரம்

ஸ்ரீனிவாச, கோவிந்த ஸ்ரீ வெங்கடாசலபதையே நமஹ !

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு

இவ்வளவுதாங்க. பெருமாளுக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஆயிரம் நாமாவளிகள் இருந்தாலும், இந்த நாமங்களுக்கு சக்தி மிக மிக அதிகம். அதி சக்தி வாய்ந்த இந்த பெருமாள் மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்