- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசரஸ்வதி அருளை பெற உதவும் விஜயதசமி வழிபாடு.

சரஸ்வதி அருளை பெற உதவும் விஜயதசமி வழிபாடு.

- Advertisement -

சிறப்பு மிகுந்த நவராத்திரி நாட்களில் நிறைவு நாளாக கருதக்கூடிய விசயத்தசமி நாளன்று பலரும் சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்காக பலவிதமான வழிபாட்டு முறைகளை செய்வார்கள். மேலும் படிக்கின்ற பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் பலரும் அன்றைய நாளில் படிப்பு தொடர்பான செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விஜயதசமி நாளன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சரஸ்வதி அருளை பெற வழிபாடு

முப்பெரும் தேவியரின் அருளை பரிபூரணமாக பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக தான் நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வீரத்தையும், மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலம் செல்வத்தையும், சரஸ்வதி தேவையை வழிபாடு செய்வதன் மூலம் அறிவையும் பெற்று வாழ்க்கையை சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்ல முடியும். அந்த வகையில் கடைசி மூன்று நாட்களாக கருதக்கூடிய சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யக்கூடிய நாட்களில் நிறைவு நாளாக தான் விஜயதசமி நாள் என்பது கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

இந்த வருடம் விஜயதசமி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வருகிறது. இன்றைய நாளில் நாம் மிகவும் எளிமையான முறையில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து சிறப்பான அறிவுத்திறனை பெற்று செயலாற்ற முடியும். மகாலட்சுமியின் பீஜ மந்திரமாக கருதப்படுவது ஸ்ரீம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல் சரஸ்வதி தேவியின் பீஜ மந்திரமாக கூறப்படுவது ஐம் என்னும் மந்திரம் தான். இந்த மந்திரத்தை பயன்படுத்திதான் நாம் விஜயதசமி நாளன்று வழிபாடு செய்யப் போகிறோம். விஜயதசமி நாளன்று படிக்கின்ற பிள்ளைகள் மட்டுமல்லாமல் அனைவருமே சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அனைவருடைய அறிவுத் திறனும் சிறப்பான முறையில் இருக்கும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு செயல்களில் வெற்றியை காண முடியும்.

விஜய தசமி நாள் அன்று காலையிலேயே சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் படத்தை வைத்து சரஸ்வதி தேவிக்கு வாசனை மிகுந்த மலர்களை சாற்றி சந்தனம் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு சரஸ்வதி தேவிக்கு முன்பாக ஒரு வெள்ளி கிண்ணத்தில் சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். நாட்டு மருந்து கடையில் தர்ப்பை புல் கிடைக்கும். அதை எடுத்து தேனில் ஐம் என்னும் பீஜ மந்திரத்தை எழுத வேண்டும். பிறகு வீட்டில் இருக்கக் கூடிய படிக்கின்ற பிள்ளைகளின் நாக்கில் அதே தர்ப்பைப்புல்லால் தேனை தொட்டு ஐம் என்று எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்த பிறகு “ஓம் ஐம் நமஹ” என்னும் மந்திரத்தை பிள்ளைகளை கூற சொல்ல வேண்டும்.

- Advertisement -

பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய அனைவரின் நாக்கிலும் இந்த மந்திரத்தை எழுதி அவர்களையும் சரஸ்வதி தேவியின் பீஜ மந்திரத்தை கூறச் சொல்ல வேண்டும். இப்படி விஜயதசமி நாளன்று சரஸ்வதி தேவியின் பீஜ மந்திரத்தை தேனால் எழுதுவதன் மூலம் நம் அனைவருக்குமே அறிவுத்திறன் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க முருகன் மந்திரம்

எளிமையான இந்த பீஜ மந்திர வழிபாட்டை முழு நம்பிக்கையோடு சரஸ்வதி தேவியை நினைத்து விஜயதசமி நாளன்று செய்பவர்களுக்கு சரஸ்வதி தேவியின் அருளால் புத்தி கூர்மை அதிகரித்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்