- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டம் தேடி வர சொல்ல வேண்டிய வார்த்தைகள்

அதிர்ஷ்டம் தேடி வர சொல்ல வேண்டிய வார்த்தைகள்

- Advertisement -

நாம் அனைவருமே தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்கென்று கொடுப்பினை வேண்டும் அதிர்ஷ்டம் வேண்டும் என்று கூறுவார்கள். நான் சரியான அதிர்ஷ்டம் கெட்டவன் என்று கூறியும் கேள்விப்பட்டிருக்கிறோம், நாம் செல்லும் முன்னே நம்முடைய துரதிஷ்டம் முன் வந்து நிற்கும் என்று புலம்புபவர்களையும் பார்த்திருப்போம். இப்படி நமக்கும் அதிர்ஷ்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் தடைகள் தடங்கல்கள் போன்றவை வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதை மாற்றி அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அதிர்ஷ்டம் தேடி வர வழிபாடு

ஒருவர் தான் நினைத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் தொடர்ச்சியாக விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். பலரும் கஷ்டப்பட்டு விடா முயற்சியுடன் பெறக்கூடிய வெற்றியை ஒரு சிலர் எளிதில் பெற்று விடுவார்கள். எந்தவித சிரமமும் படாமல் பெற்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்களை தான் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறோம். இதற்கு பலவிதமான கிரக நிலைகள் காரணமாக இருக்கும். இந்த அதிர்ஷ்டத்தை நாமும் பெற வேண்டும் என்று விரும்பும் பட்சத்தில் அதற்கென்று சூட்சுமமான இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. இந்த இரண்டு வார்த்தைகளை நாம் முழுமனதோடு கூறும் பொழுது அதிர்ஷ்டம் நம்மை தேடி வர ஆரம்பிக்கும்.

- Advertisement -

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். நம்முடைய நேர்மறையான வார்த்தைகள் நமக்கு வெற்றிகளைத் தரும் என்றும் எதிர்மறையான வார்த்தைகள் தேவையில்லாத பிரச்சினைகளில் கொண்டு வந்து சேர்க்கும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் தான் மிகவும் நேர்மறையான அதிர்ஷ்டத்தை நம்மிடம் அழைத்து வரக் கூடிய வார்த்தைகளாக இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. இந்த இரண்டு வார்த்தைகளையும் நாம் தினமும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் கூறினால் போதும். நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் பெற முடியும். நம்மை தேடி வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூட கூறலாம்.

இந்த வார்த்தைகளை கூறுவதற்கு எந்தவித நிபந்தனையும் கிடையாது. குளித்திருக்க வேண்டும், உணவு அருந்தாமல் இருக்க வேண்டும், அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. இந்த இடத்தில் இருந்து கொண்டு தான் கூற வேண்டும், இந்த இடத்தில் இருந்து கொண்டு கூறக்கூடாது என்ற நிபந்தனையும் கிடையாது. அதேபோல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நம் கூறலாம். யாரும் தொந்தரவு செய்யாத நேரமாக பார்த்துக் கொள்ளுங்கள். முழு மனதோடு ஆத்மார்த்தமாக இந்த வார்த்தைகளை நாம் கூறும்பொழுது இதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் நாம் அமர்ந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் கண்களை மூடி மூச்சை ஆழமாக உள்ளிழுத்து மெதுவாக வெளியில் விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மன அமைதி உண்டாகும். பிறகு இந்த இரண்டு வார்த்தைகளை குறைந்தபட்சம் ஐந்து நிமிடமும் அதிகபட்சம் தங்களால் எவ்வளவு நேரம் கூற முடியுமோ அவ்வளவு நேரம் கூறலாம். மனதிற்குள் கூற வேண்டும் சத்தமாக கூற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. இப்படிப்பட்ட எளிமையான வார்த்தைகளாக கருதப்படுபவை தான் “அதிர்ஷ்டம் சாஸ்வதம்” இந்த வார்த்தைகளை நாம் தினமும் கூறும் பொழுது அதிர்ஷ்டம் நம்மை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சப்த கன்னியர் மந்திரம்

அற்புதமான இந்த இரண்டு வார்த்தைகளை அனுதினமும் யார் ஒருவர் முழு மனதுடன் கூறுகிறார்களோ அவர்களை தேடி அதிர்ஷ்டம் வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்