- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசப்த கன்னியர் மந்திரம்

சப்த கன்னியர் மந்திரம்

- Advertisement -

இப்போது நவராத்திரி திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. நவராத்திரியின் ஏழாவது நாள் சப்தமி திதி. இன்று இரவு முழுவதும் சப்தமி திதி இருப்பது குறிப்பிடத்தக்கது. நவராத்திரியில் வரும் சப்தமி திதியில், சப்த மாதாக்களை வழிபாடு செய்வது அதி சிறப்பு வாய்ந்த பலனை தரும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இருக்கக்கூடிய இக்கட்டான பிரச்சனைகளிலிருந்து உடனடியாக வெளிவர வேண்டும் என்றால், சப்தமி திதியில், சப்த கன்னிகளை வழிபாடு செய்ய வேண்டும்.

பெண்களுக்கான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கொடுக்கக்கூடிய தெய்வம் இந்த சப்த கன்னியர். இந்த சப்த கன்னியருடைய ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை தான் இன்று நாம், இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மன குழப்பத்தில் இருக்கும் பெண்கள், குடும்ப பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்று நினைக்கக்கூடிய பெண்கள், திருமணம் நடக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் பெண்கள், கணவன் மனைவிக்குள் சண்டையோடு இருக்கும் பெண்கள், கோழையாக இருக்கும் பெண்கள் அனைவரும் இன்று இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஒருவரை மந்திரத்தை மட்டும் உச்சரித்து விட்டு, சப்த கன்னியரை மனதார நினைத்து வணங்கிப்பாருங்கள்.

நிச்சயம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இன்று இரவு உச்சரிக்க வேண்டிய அந்த 1 வரி மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு பெண்கள் தங்களுடைய வேலையெல்லாம் முடித்துக்கொண்டு, கை கால் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். நெற்றியில் குங்குமப்பொட்டு கட்டாயம் இருக்க வேண்டும். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சப்த கன்னியர்களையும் மனக்கண்களில் கொண்டு வந்து வணங்கிக் கொள்ளுங்கள்.

சப்த கன்னியர்களையும் உங்கள் தாயாக நினைத்துக் கொள்ளுங்கள். சப்த கன்னியர்களிடம் உங்களுடைய பிரச்சனைகளை மனம் திறந்து சொல்லுங்கள். பிறகு இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை சொன்னால் கூட போதும். அதிகபட்சம் 108 முறை சொன்னாலும் தவறு கிடையாது.

- Advertisement -

சப்த கன்னி மந்திரம்

“ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ” இவ்வளவுதான். இரவு தூங்கச் செல்லும்போது இந்த மந்திரத்தை மனதார சொல்லி சப்த கன்னியரை வணங்கி தூங்கச் சென்றால், மறுநாள் காலை உங்களுடைய பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வு உங்கள் கண்முன்னே வரும். இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு பிரச்சனைகளுக்காக பஞ்சம்.

இதையும் படிக்கலாமே: கடனை அடைக்கும் செவ்வாய்க்கிழமை கொள்ளு பரிகாரம்

பிரச்சனையை தீர்த்து வைக்கும் இந்த மந்திரம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்று இரவு சொல்லிப் பாருங்கள். எவ்வளவு பெரிய மன பாரம் பெண்களுக்கு இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய கட்டான சூழ்நிலையில் நீங்கள் சிக்கியிருந்தாலும் சரி, அந்த பிரச்சனையில் இருந்து உங்களை காப்பாற்ற அந்த சப்த கன்னியர் நாளை ஏதாவது ஒரு ரூபத்துல உதவி செய்வாங்க. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலன் பெறவும்.

சற்று முன்