நவராத்திரி நாட்களில் வரும், அஷ்டமி திதியை தான் துர்காஷ்டமி என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த துர்காஷ்டமி திதியானது செவ்வாய்க்கிழமைகளில் வருவது என்பது அதிசிறப்பு. இன்று 30-9-2025 செவ்வாய்க்கிழமை துர்க்காஷ்டமி திதி இருக்கிறது.
இந்த நாளில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்பவர்கள் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் விலகும். கஷ்டங்கள் தீரும். கடன் சுமையிலிருந்து சுலபமாக விடுபட, கடன் என்னும் அரக்கனை வதம் செய்ய, இன்று துர்க்கை அம்மனை எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
துர்காஷ்டமி கடன் அடைய பரிகாரம்
கடன் சுமையிலிருந்து நாம் சீக்கிரம் வழிபட வேண்டும் என்றால், நாம் வழிபட வேண்டிய அம்மன் விஷ்ணு துர்க்கை. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்கு துர்காஷ்டமி அன்று இந்த துக்கையை வழிபாடு செய்வதுதான் சிறப்பான பலனைத் தரும்.
விஷ்ணு திருக்கை என்பவள் கையில் சங்கு சக்கரத்தை ஏந்தி கொண்டு இருப்பாள். இன்று இவளுடைய பாதங்களை இறுக்கப் பற்றிக் கொண்டாலே போதும் கடன் சுமையிலிருந்து வெளிவர தேவையான வருமானம் நமக்கு கிடைத்துவிடும்.
இன்று செவ்வாய்க்கிழமை. ராகு கால நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை மதியம் 3:00 டு 4:30 மணி வரை ராகு கால நேரம் இருக்கிறது. பூஜை அறையில் இருக்கும் அம்மனை துர்கையாக மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த துர்க்கை அம்மனுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது. அந்த கடனை அடைக்க எவ்வளவு பணம் வேண்டும் என்பதையும் துர்க்கை அம்பாளிடம் வேண்டுதலாக வைத்து, கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை துர்க்கை அம்மன் பாதத்தில் வைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் 27 முறை சொல்லுங்கள்.
விஷ்ணு துர்க்கை மந்திரம்
ஓம் கிலீம் விஷ்ணு துர்காயை நமஹ
இவ்வளவுதான். இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு விஷ்ணு துர்க்கையை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்வது அதி சிறப்பு. உங்களுடைய கணவர், கடன் தீர வேண்டும், உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க வேண்டும், பிள்ளைகளுக்கு இருக்கும் கடன் நீங்க வேண்டும், என்று இந்த பரிகாரத்தை செய்யலாம்.
குடும்பத்தில் தீராத கஷ்டங்கள் தீர இந்த வேண்டுதலை வைத்துவிட்டு, தீப தூப ஆராதனை காண்பித்து உங்களால் முடிந்த நெய்வேதியம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த வழிபாட்டினை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் துர்காஷ்டமி வழிபாடு
வழிபாடு முடிந்த பிறகு அந்த ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து அறுத்து சாறு பிழிந்து வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக சாப்பிட்டு விட வேண்டும். இந்த எளிமையான பரிகாரத்தை துர்காஷ்டமி அன்று ராகு கால நேரத்தில் மேற்கொண்டால் போதும். அன்றோடு உங்களுடைய கஷ்டங்கள் வதம் செய்யப்படும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.