அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை ஒன்பது நாட்கள் பல ரூபங்களில் வடிவெடுத்து அசுரனை வதம் செய்த நாட்களை தான் நாம் நவராத்திரி ஆக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட நவராத்திரியின் நிறைவு நாளாக தான் ஆயுத பூஜை என்று கூறக்கூடிய சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆயுத பூஜையின் முழுமையான அர்த்தம் அம்பிகை அசுரனை வதம் செய்வதற்காக எடுத்த ஆயுதங்களை குளிர்விப்பது தான். அதனால்தான் நாமும் நம்முடைய இல்லத்தில் இருக்கக்கூடிய ஆயுதங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் வழிபாடு செய்கிறோம்.
மேலும் தீயவற்றை அழித்து நல்லவை வெற்றி பெறுவதற்குரிய அடையாளமாக தான் நவராத்திரி நாட்கள் திகழ்கின்றது. அதனால் அன்றைய நாளில் நாம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீயவையும் வெளியேறு நமக்கு நன்மைகள் உண்டாக பலவிதமான வழிபாட்டு முறைகளோடு ஒரு சில பரிகாரங்களையும் செய்ய வேண்டும். அந்த வகையில் நிலை வாசலில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆயுத பூஜை பரிகாரம்
இந்த பரிகாரத்தை ஆயுத பூஜை என்று கூறக்கூடிய சரஸ்வதி பூஜை அன்றுதான் செய்ய வேண்டும். இந்த முறை ஆயுத பூஜை அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வருகிறது. நிலைவாசலில் தான் கிரகலட்சுமி, குலதெய்வமும், காவல் தெய்வமும் வீற்றிருக்கிறார்கள் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் விசேஷ நாட்கள் வரும் பொழுது நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து தோரணங்கள் கட்டி அலங்காரப் படுத்துகிறோம். அப்படிப்பட்ட நிலை வாசலில் நாம் இந்த ஒரே ஒரு மூட்டையை கட்டுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதோடு நம் வீட்டிற்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். இந்த மூட்டையை வீட்டில் தான் கட்ட வேண்டும் என்று இல்லை. தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் நாம் கட்டலாம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு மஞ்சள் நிற துணி வேண்டும். இந்த மஞ்சள் நிற துணியில் ஏழு ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரே ஒரு பட்டை, ஒரே ஒரு ஏலக்காய் மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இதை அப்படியே மூட்டையாக கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஆயுத பூஜை அன்று முழுவதும் இந்த மூட்டை பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் விஜயதசமி நாளன்று ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்துவிட்டு நாம் செய்யக்கூடிய வழிபாட்டை செய்து முடித்த பிறகு குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், விநாயகப் பெருமானையும் மனதார நினைத்துக் கொண்டு இந்த மூட்டையை வீட்டு நிலை வாசலுக்கு வெளியே கட்டி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் பெருக ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: படிப்பில் ஆர்வம் பெருக ஆஞ்சநேயர் வழிபாடு
வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய இந்த எளிமையான பொருட்களை வைத்து ஆயுத பூஜை அன்று பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இதுவரை இல்லாத அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.