நாளைய தினம், வளர்பிறை வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதி, நாளை காலை 7:40 மணி வரை பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரமும் இருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள், நமக்கு பல மடங்கு பலனை தரும். உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் அதிகம் இருக்கிறதா.
அடமானத்தில் வைத்த நகையை மீட்க முடியாமல் தவித்து வருகிறீர்களா. வறுமையில் வாடி கஷ்டப்படும் உங்களை, செல்வ செழிப்பாக மாற்ற, இந்த ஒரு பரிகாரம் போதும். கல்லுப்பை வைத்து எளிமையாக இந்த பரிகாரத்தை நாளை செய்பவர்கள் எதிர்காலத்தில் பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சியை அடைவீர்கள்.
நாளை 6:00 மணியிலிருந்து 7:40 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. அவ்வளவு சீக்கிரமாக இந்த பரிகாரத்தை செய்ய முடியாது என்பவர்கள், நாளை வரவிருக்கும் வெள்ளிக்கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நாளை காலை கையில் பணத்தை எடுத்துக்கொண்டு போய், வீட்டு பக்கத்தில் இருக்கும் கடையில் 1 கிலோ கல்லுப்பு வாங்கிக் கொள்ளுங்கள்.
அதை உங்களுடைய பையில் வைத்துக்கொண்டு கொஞ்சம் துளசி இலைகளை வாங்கிக் கொண்டு நேராக பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். கல் உப்பு வாங்கிய கையோடு பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி இலைகளை கொடுத்து அர்ச்சனை செய்து, பெருமாளை வழிபாடு செய்து, மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து அந்த பெருமாள் கோயில் பிரசாதத்தோடு இந்த கல்லுப்பை வீட்டிற்குள் எடுத்து வாருங்கள்.
உங்கள் கையில் இருப்பது வெறும் கல்லுப்பு அல்ல. அது மகாலட்சுமி குடி கொண்டிருக்கும் ஒரு பொருள். உங்களோடு மகாலட்சுமி தாயார் அந்த பெருமாளும், அந்த கல்லுப்பின் ரூபத்தில் உங்கள் வீட்டிற்குள் வருவார்கள். அந்த நிமிடமே உங்கள் வீட்டை பிடித்த வறுமையானது நீங்கிவிடும்.
பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வாங்கி வந்த கல்உப்பை ஒரு சின்ன பவுலில் கொட்டி, மகாலட்சுமி தாயார் முன்பு வைத்து விடுங்கள். பிறகு உங்களுடைய பிரார்த்தனையை இறைவனிடம் வைக்க வேண்டும். ஒரு மஞ்சள் நிற துணியில் 101 ரூபாய் வைத்து, முடிச்சு போட்டு திருப்பதி பெருமாள் பாதங்களில் வைத்து விடுங்கள். அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளின் முன்பு அந்த முடிச்சை வைக்க வேண்டும்.
திருப்பதி பெருமாளே இந்த காணிக்கை உனக்காக, என்னுடைய பண கஷ்டம் தீர்ந்தவுடன் இந்த காணிக்கையை கொண்டு வந்து திருப்பதி கோவிலில் சேர்ப்பதாக மனம் உருகி பிரார்த்தனை செய்து, கற்பூர ஆராதி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாடு முடிந்தவுடன் அந்த கல்லுப்பை எடுத்து சமைப்பதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: மாணவர்கள் படிப்பில் சிறக்க விஜயதசமி பரிகாரம்
நாளைய தினம் மட்டும் நீங்கள் இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கையோடு செய்துவிட்டால் உங்கள் வீட்டுக்குள் மகாலட்சுமி நிரந்தரமாக குடி கொள்வாள். அந்த திருப்பதி பெருமாள் உங்களுக்கான அருள் ஆசையை பரிபூரணமாக வழங்கி விடுவார். இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் அடுத்த புரட்டாசி மாதம் வருவதற்குள் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.