- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனி மகா பிரதோஷ பரிகாரம்

சனி மகா பிரதோஷ பரிகாரம்

- Advertisement -

சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுவது பிரதோஷம் என்றும் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பிரதோஷமாக சனி மஹா பிரதோஷம் திகழ்கிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். மற்ற பிரதோஷங்களில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யாதவர்கள் கூட சனி மகா பிரதோஷ நாள் அன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் ஆலயத்திற்கு சென்றும் வழிபாடு செய்வார்கள், ஒரு சிலர் வீட்டிலேயே வழிபாடு செய்வார்கள். பல பிரதோஷ விரத பலனை பெறக்கூடிய சிறப்புமிக்க பிரதோஷமாக தான் சனி மகா பிரதோஷம் திகழ்கிறது என்பதால் அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய சிவ வழிபாடு நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கல் உப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனி மகா பிரதோஷ பரிகாரம்

நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நலமுடன் நாம் வாழ வேண்டும் என்பதற்காக நாம் செய்யக்கூடிய ஒரு சிறப்பான வழிபாடாக தான் பிரதோஷ வழிபாடு திகழ்கிறது. பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவ வழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து விதமான தோஷங்களும், கஷ்டங்களும் விலகும் என்றும் அனைத்து தெய்வங்களின் அருளைப் பெற முடியும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதை பலரும் இன்றளவும் பின்பற்றி தான் வருகிறோம். அந்த வகையில் சனி மகா பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய ஒரு உப்பு வழிப்பாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளோ அல்லது ஆறு முப்பது மணியிலிருந்து 11 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் நம்முடைய வீட்டிலும் செய்யலாம் ஆலயத்திலும் செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள்தான் தேவைப்படும். ஒன்று உப்பு மற்றொன்று சிவபெருமானுக்குரிய வில்வ இலை. கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். தரையில் அமரும் பட்சத்தில் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர வேண்டும்.

வலது கையில் ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உப்பிற்கு மேல் மூன்று வில்வ இலைகளை வைக்க வேண்டும். வலது கைக்கு கீழ் இடது கையை வைத்துக்கொண்டு நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு சிவபெருமானை மனதார நினைத்து “சம்போ சிவ சம்போ” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு சிவபெருமானிடம் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை முழுமனதோடு ஆத்மார்த்தமாக கூற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு கூறி முடித்த பிறகு வில்வ இலைகளை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பை நாம் எப்பொழுதும் பயன்படுத்துவது போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒரு எளிமையான வழிபாட்டை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளால் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: கடனை தீர்க்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு

எளிமையான இந்த வழிபாட்டை முழு மனதோடு சனி மஹா பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நினைத்து செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்