- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க பிள்ளையார் பரிகாரம்

நினைத்தது நடக்க பிள்ளையார் பரிகாரம்

- Advertisement -

என்னங்க சொல்றீங்க, சாமி கும்பிடாமல் இருந்தாலே பிரச்சனைகள் வரவில்லை. நேரம் காலம் பார்த்து, கோவிலுக்கு சென்று, விளக்கு போட்டு சாமி கும்பிடும் போது தான், பிரச்சனைகள் அதிகமாக வருகிறது. இப்படி நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா.

பிரச்சனைகள் உங்களுக்கு அதிகமாக வருகிறது என்றால், உங்கள் கர்ம வினைகள் கொஞ்சம் கொஞ்சமாக, இந்த ஜென்மத்தில் கரைந்து வருகிறது என்றுதான் அர்த்தம். என்றோ நீங்கள் செய்த தவறுக்கு உங்களுக்கான பிராயச்சிதத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கின்றான் என்று தான் அர்த்தம்.

- Advertisement -

ஆகவே வரும் பிரச்சனைகளை கண்டு என்றும் துவண்டு போகக்கூடாது. தொடர்ந்து இறைவனை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும். இறைவன் பாதத்தில் நிரந்தரமாக ஒரு இடம் கிடைக்கும்.

உங்கள் கஷ்டத்திற்கு நிரந்தர தீர்வை தரப்போகும் ஒரு விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பரிகாரம் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் கொஞ்சம் சிரமப்பட்டு இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் துன்பங்கள் நிரந்தரமாக நீங்கும்.

- Advertisement -

பிரச்சனை நீங்க விநாயகர் வழிபாடு

உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் இந்த பரிகாரம் செய்ய நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மூன்று மண் அகல் விளக்குகள் கட்டாயம் இந்த பரிகாரத்திற்கு தேவை. தேங்காய் எண்ணெய் ஊற்றி தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

விநாயகருக்கு முன்புறமாக இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி விடுங்கள். சின்ன மண் அகல் விளக்கு ஒன்று எடுத்து, விநாயகருக்கு பின்புறமாக வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். மீண்டும் விநாயகர் முன்பு வந்து அமர்ந்து உங்களுடைய கோரிக்கையை விநாயகப் பெருமானிடம் வையுங்கள். எவ்வளவு நேரம் தெரியுமா.

- Advertisement -

நீங்கள் விநாயகர் பின்புறம் ஏற்றி வைத்திருக்கும் அந்த சின்ன மண் அகல் விளக்கு எரிந்து முடியும் வரை, உங்களுடைய பிரார்த்தனையை விநாயகப் பெருமானிடம் வைக்க வேண்டும். விநாயகப் பெருமானுக்கு பின்பக்கம் எரியக்கூடிய தீபம் உங்களுடைய வேண்டுதலை அதி விரைவாக நிறைவேற்றி தரும். விநாயகருக்கு செம்பருத்தி பூ மாலை போட்டு விட்டு இந்த அற்புதமான பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் செய்து பாருங்கள்.

உங்களுடைய வேண்டுதல் ஒரே நாளில் பலிக்கும் அதிசயம் நடக்கும். பிறகு யார் சொன்னாலும் இந்த வழிபாட்டை நிறுத்த மாட்டீங்க. வாரம் தோறும் செவ்வாய் கிழமை இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அந்த ஒரு மணி நேரம் விநாயகர் கோவிலில் அமர்ந்து வேண்டுதல் வைக்க தொடங்கி விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: தொழில் முடக்கமும் வேலை தடையும் விலக செய்ய வேண்டிய வழிபாடு

நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைக்காத அதிசயங்கள் எல்லாம் நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்