- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்

நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் ஒரு சில நாட்களில் சிறப்பான வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று கூறி அதற்குரிய வழிமுறைகளையும் வகுத்து வைத்துள்ளார்கள். அந்த வகையில் நம்முடைய முன்னோர்களும் சித்தர்களும் முனிவர்களும் கையாண்ட ஒரு முக்கியமான நேரமாக தான் சோடச கலை நேரம் திகழ்கிறது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்கள் தங்களுடைய நியாயமான வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சோடசக்கலை நேரம் என்பது வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே வரும். அந்த ஐந்து வினாடிகளும் எப்பொழுது வரும் என்பது நம்மை போன்றவர்களால் கண்டறிய முடியாத ஒன்றாகவே திகழ்கிறது.

அந்த ஐந்து வினாடிகளை கண்டறிய கூடியவர்களாக சித்தர்களும் முனிவர்களுமே திகழ்ந்தார்கள். அதனால் தான் அன்றைய காலத்தில் சித்தர்களும் முனிவர்களும் இந்த சோடசக் கலை நேரத்தை முழுமையாக பயன்படுத்தி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சோடச கலை நேரம் என்பது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும்பொழுது அன்றைய நாளில் நம் முருகப்பெருமானை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்குரிய அற்புதமான ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே நாம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை சரியாக சோடச கலை நேரம் வரக்கூடிய நேரத்தில் நாம் வழிபாடு செய்யும்பொழுது முருகனின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படி முருகனின் அருளை பெறுவதற்கு என்று சிறப்பான ஒரு மந்திரமும் இருக்கிறது.

அந்த மந்திரத்தை நாம் முழுமனதோடு முருகப் பெருமானை நினைத்து காலை 8 50 மணியிலிருந்து 10: 50 மணிக்குள் நாம் கூறுவதன் மூலம் முருகனின் அருளை நம்மால் கண்டிப்பான முறையில் பெற முடியும். மேலும் எந்த வேண்டுதலை நினைத்து நாம் இந்த மந்திரத்தை கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்கிறோமோ அந்த வேண்டுதலும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

ஓம் சோம ஸ்கந்தாய நமஹ

இதையும் படிக்கலாமே: ப்ரோமோஷன் கிடைக்க முருக வழிபாடு

முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று சோடச கலை நேரத்தில் முருகனின் மந்திரத்தை கூறி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்துக்கொள்கிறோம்.

சற்று முன்