கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். முருகப்பெருமானை நினைத்து மனமுருகி நாம் செய்யக்கூடிய வேண்டுதல் விரைவிலேயே நல்ல பலனை தரும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறாமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு மந்திர வழிபாட்டை செய்வதன் மூலம் அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேண்டுதலை நிறைவேற்றும் மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் முருகப்பெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. மந்திரத்தை கூறி வழிபாடு செய்வதை விட மந்திரத்தை கூறிக்கொண்டு எழுதி வழிபாடு செய்யும்பொழுது அதற்கு கூடுதல் பலன் உண்டாகும் என்றே கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஸ்ரீ ராமஜெயம் என்று கூறிக் கொண்டே எழுத வேண்டும், அப்படி எழுதுவதன் மூலம் விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறி இருக்கிறார்கள். அதே வழிமுறையை பின்பற்றி தான் முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை கூறிக் கொண்டே எழுத போகிறோம்.
இந்த மந்திர வழிபாட்டை நாம் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை செவ்வாய்க்கிழமை இந்த மந்திர வழிபாட்டை தொடங்க இயலவில்லை என்பவர்கள் முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்திலோ அல்லது சஷ்டி திதியில் தொடங்கலாம். தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். அதேபோல் பெண்கள் தீட்டு சமயமாக இருக்கும்பொழுதும் வேறு ஏதாவது பிறப்பு தீட்டு இறப்பு தீட்டு இருக்கும் பொழுது இந்த மந்திர வழிபாட்டை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட முருகனை நினைத்து விரதம் இருந்து செய்யக்கூடிய ஒரு வழிப்பாடாகவே இந்த வழிபாடு திகழ்கிறது. அதற்காக உணவருந்தாமல் விரதம் இருக்க வேண்டும் என்று இல்லை. சுத்தமாக இருந்து கொண்டால் போதும்.
இந்த மந்திர வழிபாட்டை குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும்,. குறிப்பிட்ட இடத்தில் தான் செய்ய வேண்டும் என்பதும் இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்காக தனியாக ஒரு நோட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நோட்டில் முதலில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை எழுத வேண்டும். பிறகு முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை ஆறு முறை எழுதவேண்டும். பிறகு அந்த நோட்டை எடுத்து பூஜை அறையில் வைத்து விடலாம். அடுத்த நாள் அதே நோட்டை எடுத்து முதல் நாள் என்ன வேண்டுதலை நாம் மேலே எழுதினோமோ அந்த வேண்டுதலையே திரும்பவும் எழுதி ஆறு முறை முருகனின் மந்திரத்தை எழுத வேண்டும்.
இப்படி தொடர் ச்சியாக 21 நாட்கள் ஒரே வேண்டுதலை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆறு முறை இந்த மந்திரத்தை எழுத வேண்டும். முக்கிய குறிப்பு வேண்டுதலை முன்வைக்கும் பொழுது எதிர்மறை வார்த்தைகளை உபயோகப்படுத்தக்கூடாது. அதாவது கடன் தீர வேண்டும், நோய் விலக வேண்டும், சண்டையில்லாமல் வாழ வேண்டும் என்று எழுதாமல் நேர்மறையான வார்த்தைகளாக பணம் சேர வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், ஆரோக்கியமாக வாழ வேண்டும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று எழுத வேண்டும். 21 நாட்கள் நிறைவடைந்த பிறகு அந்த நோட்டை எடுத்து முருகனின் பாதத்தில் வைத்து விட வேண்டும். அந்த வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதை அருகில் இருக்கக்கூடிய முருகனின் ஆலயத்தில் கொண்டு சென்று வைத்து விட வேண்டும்.
மந்திரம்
” ஓம் ஸ்ரூம் ஸ்கந்தாய நமஹ “
இதையும் படிக்கலாமே: நியாயமான கோரிக்கை நிறைவேற சோரசக்கலை வழிபாடு
நம்முடைய நியாயமான வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திர வழிபாட்டை செய்யும் பொழுது நம்முடைய முயற்சிக்கு ஏற்ற பலன் விரைவிலேயே கிடைக்கும் என்ற தகவலை கூறுகின்ற பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.