இருள் சூழ்ந்த உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களை சுற்றி இருக்கும் ஆராவை வலுப்படுத்த வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் கெட்ட ஆராவை விலக்கி விட வேண்டும். ஆமாங்க. நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி அடித்து விட்டாலே போதும். நமக்கான நல்லது தானாக தேடி வரும்.
இருள் நீங்கும்போது, தானாக வெளிச்சம் உள்ளே வரும். வாழ்க்கையில் இருக்கும் வறுமை நீங்கும். இதற்கு நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும், தினமும் என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும், இதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சித்தர் வழிபாடு
இருளில் இருக்கும் உங்கள் வாழ்க்கை உடனடியாக வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு சித்தர் வழிபாடு. சித்தர் வழிபாடு செய்வதற்கு முன்பாக நீங்கள் குளிக்கும் தண்ணீரில் 2 ஸ்பூன் பசும் பால் ஊற்றி கலந்து குளித்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் கொஞ்சமாக பன்னீர் எடுத்து குளிக்கும் தண்ணீரில் ஊற்றி கலந்து, குளிக்கும் பட்சத்தில் உங்கள் உடம்பு சுத்தமாவதோடு சேர்த்து உங்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டமும் சுத்தமாக இருக்கும். நெகட்டிவ் எனர்ஜி உடனடியாக உங்களை விட்டு வெளியேறும்.
சுத்தபத்தமாக குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டிலேயே கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள், அல்லது நின்று கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம். தினமும் குளித்து முடித்தவுடன் மனதை ஒருநிலைப்படுத்தி சித்தர்களை வணங்க வேண்டும். சித்தர் வழிபாடு உங்கள் வாழ்க்கையை சுத்தி செய்யும் என்பது நம்பிக்கை.
சித்தர்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் சரி. இந்த பூமியில் கண்ணுக்குத் தெரியாமல் நடமாடிக் கொண்டிருக்கும் அனைத்து சித்தர்களும் நமஸ்காரம் என்று சொல்லிவிட்டு இந்த மந்திரத்தை 27 முறை படிக்க வேண்டும் தினமும் காலையில் படிக்கலாம்.
சித்தர் மந்திரம்
ஓம் அகத்திசாய நமஹ !
ஓம் நந்திசாய நமஹ !
ஓம் திரு மூல தேவாய நமஹ !
ஓம் கருவூரார் தேவாய நமஹ !
ஓம் ராமலிங்க தேவாய நமஹ !
இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை தரும் துளசி பூஜை
சித்தர்களுக்கு எல்லாம் சித்தர்களின் அடக்கமாகத் திகழும், இந்த 5 சித்தர்களின் நாமத்தை தினமும் உச்சரித்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் இருள் சூழாது. ஏற்கனவே சூழ்ந்திருக்கும் இருளையும் விளக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. இருள் நீங்கும் போது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் வறுமையும் தானாக விலகி விடும். செல்வ செழிப்பு தானாக உயர துவங்கிவிடும். தொடர்ந்து 27 நாட்கள், 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் பெரும் நல்ல பலனை நீங்களும் அடைவீர்கள் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.