- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதன மழை பொழியும் வாராகி மந்திரம்

தன மழை பொழியும் வாராகி மந்திரம்

- Advertisement -

வாழ்க்கையில் இருக்கக்கூடிய அதிகப்படியான கடன் பிரச்சினைகளும் பணக்கஷ்டமும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வாராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வரக்கூடிய தேய்பிறை பஞ்சமியான இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் இரவு 12 மணிக்குள் இந்த ஒரு வாராகி அம்மனின் மந்திரத்தை கூறுபவர்களுக்கு கடன் பிரச்சினை தீர்வதோடு தன வரவும் உண்டாகும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தன மழை பொழியும் வாராகி மந்திரம்

தன்னை வழிபடும் பக்தர்களின் கஷ்டங்களை தீர்க்கக்கூடிய ஒரு உக்கிர தெய்வமாக தான் வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனிடம் பக்தர்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல் வாழ்வதற்குரிய வரத்தை பெற வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் வாராகி அம்மனை பஞ்சமி திதியில் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்வதோடு வாராகி அம்மனுக்குரிய மந்திரத்தையும் கூறும் பொழுது அந்த மந்திர வழிபாடானது பல மடங்கு பலனை தரும். அந்த வகையில் இன்று தேய்பிறை பஞ்சமி. இன்று இரவுக்குள் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது இரவு 7 மணிக்கு மேல் தான். வராகி அம்மன் இரவு தேவதையாக திகழ்கிறார். அதனால் எவ்வளவு காலதாமதமாக வாராகி அம்மனை இரவு நேரத்தில் வழிபாடு செய்கிறோமோ அதற்கேற்றார் போல் நமக்கு பலன் அதிகமாக கிடைக்கும் என்றே கூறலாம். மேலும் இன்றைய தினம் சனிக்கிழமை, சனிக்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிகளவு பலன் கிடைக்கும். மேலும் சனீஸ்வர பகவானின் அருளையும் பெற முடியும். அதனால் இன்று இரவு 12 மணிக்குள் வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து கூறுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனையும் பண பிரச்சனையும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

கடன் பிரச்சினை தீரவும் பணப்பிரச்சினை தீரவும் நமக்கு அதிக அளவில் பண வரவு உண்டாக வேண்டும் அல்லவா? பண வரவை தரக்கூடிய வாராகியாக தான் சொர்ண வாராகி திகழ்கிறார். அதனால் இன்றைய தினம் சொர்ண வாராகியின் அதி சக்தி வாய்ந்த மந்திரத்தை நாம் கூறும் பொழுது ஸ்வர்ண வாராகியின் அருளால் தன மழை பொழியும் என்றே கூறலாம். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி இன்றைய நாளை தவறவிடாமல் வாராகி அம்மனின் இந்த மந்திரத்தை கூறும்பொழுது அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் கூறலாம். வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு தான் இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். தரையில் விரிப்பை விரித்து அமர்ந்துதான் கூற வேண்டும் என்று இல்லை. வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு முழு மனதோடு வாராகி அம்மனை நினைத்து தன மழை பொழிய வேண்டும் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை நிறுத்தி நிதானத்துடன் 15 நிமிடம் கூற வேண்டும். பிறகு திரும்பவும் வராகி அம்மனிடம் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

மந்திரம்

” ஸ்ரீம் தனவங்கரி ஸ்வர்ண வாராகி வசிய வசிய ஸ்வாஹா “

இதையும் படிக்கலாமே: கடன் தீர குபேர மந்திரம்

தன வரவை அருளக்கூடிய ஸ்வர்ண வராகியின் இந்த மந்திரத்தை தேய்பிறை பஞ்சமியான இன்று இரவுக்குள் முழு மனதோடு கூறுபவர்களுக்கு அவர்களுடைய பணப்பிரச்சினை முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்