நிதிகளுக்கு எல்லாம் அதிபதியாக நியமிக்கப்பட்ட குபேரனுக்கு நம் கடன் பிரச்சனைகளை தீர்க்க கூடிய சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன. ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் தோஷங்களும், பிரச்சனைகளும் இருந்தால் அதன் விளைவாக அவன் எவ்வளவு சம்பாதித்தாலும், கடன்காரனாக தான் இருப்பான். இதிலிருந்து எளிமையாக விடுபடுவதற்கும், தோஷங்கள் நீங்க பெறுவதற்கும் குபேரனுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
கடன் பிரச்சனையை தீர்க்கக்கூடிய குபேர மந்திரங்கள் பல உள்ளன. அவற்றில் பொதுவாகச் சொல்லப்படும் சக்தி வாய்ந்த குபேர மந்திரம் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
கடன் தீர்க்கும் செல்வம் சேர்க்கும் குபேர மந்திரம்:
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா.
பொருள்:
யக்ஷர்களின் அரசரும், வைஸ்ரவணன் என்ற பெயரால் அறியப்படுபவரும், செல்வம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியுமான குபேரரே! எனக்குச் செல்வத்தையும், தானிய வளத்தையும் கொடுத்து அருளுமாறு வேண்டுகிறேன். இந்த மந்திரத்தை தினந்தோறும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில், விளக்கேற்றி வைத்து 108 முறை ஜெபிப்பது சிறந்தது என்று நம்பப்படுகிறது. இது செல்வம், வளம் ஆகியவற்றைக் கொடுப்பதுடன், கடன் பிரச்சனைகள் தீரவும் உதவும். மேலும், குபேரருடன், மகாலட்சுமியையும் சேர்த்து வழிபடுவது மிகவும் விசேஷமானது.
கடன் பிரச்சனைகள் தீர குபேர மந்திரத்துடன், ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம் அல்லது ருண விமோசன பைரவர் வழிபாடு போன்றவற்றையும் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும் என்று ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள். மந்திரங்களை உச்சரிக்கும் போது முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் சொல்வது மிகவும் முக்கியம். வியாழன் கிழமையில் குபேரன் படத்தின் முன்பு குபேர தீபம் ஏற்றி வைத்து, மேற்கூறிய குபேர மந்திரத்தை 108 முறை உச்சரித்து வந்தால், தீராத கடன் தொல்லைகள் தீரும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு, ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தில் தண்ணீர் வைத்து மகாலட்சுமியை அதில் வருமாறு பிரார்த்தித்து, ரூபாய் நோட்டுகள் மற்றும் உங்களிடம் இருக்கும் தங்க நகைகள் சிலவற்றை ஒரு தாம்பூலத்தில் வைத்து தீராத கடன் தொல்லைகள் தீர்ந்து, செல்வ வளம் பெருக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து லட்சுமி குபேர மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
இதையும் படிக்கலாமே:
பணம் தரும் அதிர்ஷ்ட தீப வழிபாடு
ருண ரோக விமோசனத்தை கொடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த கால பைரவர் சன்னதிக்கு சென்று, தேய்பிறை அஷ்டமிகளில் விளக்கேற்றி வைத்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, குபேர காயத்ரி மந்திரம் உச்சரித்து வர, கோடி கோடியாக கடன் இருந்தாலும் விரைவிலேயே அவை நிவர்த்தி அடைந்து, செல்வவளம் பெருகும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது. குபேரனுக்கு பிடித்தமான இனிப்பு வகைகள் அதாவது கேசரி, பாயாசம், ஸ்வீட்ஸ் போன்றவற்றை நீங்கள் வியாழன் கிழமைகளில் ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்து வந்தாலும் விரைவில் உங்களுடைய கடன்கள் தீரும் என்பது நம்பிக்கை. வாயில்லா ஜீவன்களுக்கு சனிக்கிழமைகளில் பைரவராக நினைத்து உணவு தானம் செய்யுங்கள். குறிப்பாக நாய்களுக்கு தானம் செய்ய பைரவ அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் தொழில் முன்னேற்றம் உண்டாகும், கடன்கள் குறையும்.