நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும் அல்லது கஷ்டங்களோ துன்பங்களோ இருக்கும். இவை அனைத்திற்கும் காரணமாக திகழக்கூடியவர்கள் நவகிரகங்கள் தான். அப்படிப்பட்ட நவகிரகங்கள் பெரும்பாலும் சிவபெருமானின் ஆலயத்தில் தான் வீற்றிருக்கும், பெருமாளின் ஆலயத்தில் வீற்றிருக்காது. அதனால் பலரும் நவகிரக தோஷத்தை நீக்க வேண்டும் என்பதற்காக சிவாலயத்திற்கு சென்று அங்கிருக்கக்கூடிய நவகிரகங்களை வழிபாடு செய்வார்கள். பெருமாள் ஆலயத்திற்கு சென்றாலும் நமக்கு நவகிரக தோஷம் என்பது நீங்கும். ஆம் நம்முடைய நவகிரக தோஷத்தை நீக்கக்கூடிய ஒரு தெய்வமாக தான் சுதர்சன சக்கரம் திகழ்கிறது. அந்த சுதர்சன சக்கரத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது எண்ணி அடங்காத பலனை பெற முடியும். அப்படிப்பட்ட சுதர்சன சக்கர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுதர்சன சக்கர வழிபாடு
பெருமாளின் ஆயுதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் சுதர்சன சக்கரம். இந்த சுதர்சன சக்கரம் பலரும் செய்த பாவத்தை நீக்கி மோட்சத்தை தந்ததாக கருதப்படுகிறது. அதே சுதர்சன சக்கரத்தை நாமும் வழிபாடு செய்யும்பொழுது நமக்கும் எண்ணி அடங்காத நன்மைகள் உண்டாகும் என்றே கூறலாம். அந்த வகையில் திருமண தடைகள் ஏற்பட்டிருக்கிறது என்றாலோ, செய்யக்கூடிய செயல்களில் வெற்றி இல்லை என்றாலோ, சுதர்சன சக்கர வழிபாடு மிகுந்த பலனை தரும். எப்படி எதிரிகளை அழிக்க கூடியதாக சுதர்சன சக்கரம் திகழ்கிறதோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பயம், கடன், வியாதி, எதிரி, பகை போன்ற அனைத்தையும் நீக்கும்.
சுதர்சன சக்கரத்திற்கு உரிய கிழமையாக வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் திகழ்கிறது. அதனால் ஒவ்வொரு வாரத்தில் வரக்கூடிய வியாழக்கிழமை அன்றும் சனிக்கிழமை அன்றும் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று சுதர்சன சக்கரத்தை வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது சுதர்சன சக்கரத்திற்கு சிவப்பு நிற மலர்களால் தயார் செய்யப்பட்ட மாலையை அணிவித்து அவருக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து விட்டு சுதர்சன சக்கரத்தின் மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு அங்கேயே அமர்ந்து பாராயணம் செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு நூற்றியெட்டு என்ற எண்ணிக்கையில் பாராயணம் செய்து கொள்ளுங்கள்.
மந்திரம்
” ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நம “
இப்படி நாம் சுதர்சன சக்கரத்தை வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும். திருமண தடை விலகி திருமண யோகம் உண்டாக்கும். செய்யக்கூடிய காரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் விலகி வெற்றிகள் உண்டாகும். நம்மை பகைவராக கருதக்கூடியவர்கள் நம்மை விட்டு விலகுவார்கள். மன பயம் முற்றிலும் நீங்கும். கடன் பிரச்சனையும் உடல் உபாதையால் ஏற்படக்கூடிய அவதியும் முற்றிலும் நீங்கும். இதோடு முக்கியமாக கல்வியில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி யோகம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: பஞ்ச தத்வ கிருஷ்ண மந்திரம்
சக்தி வாய்ந்த இந்த சுதர்சன சக்கரத்தை முழுமனதோடு யார் ஒருவர் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.