- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 23 அக்டோபர் 2025

இன்றைய ராசிபலன் – 23 அக்டோபர் 2025

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலையை இன்று கையில் எடுக்கலாம். வேலையில் எந்த பின்னடைவும் உண்டாகாது. நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கைநிறைய லாபம் கிடைக்கும். புதிய முதலீடும் செய்யலாம் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. தன்னம்பிக்கையும் தைரியமும் வெளிப்படும் நாள். மனதில் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். வெற்றி அடைவீர்கள். எதிரிகளை ஜெயிப்பீர்கள். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து வெற்றி வாகையை சூடுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளை சம்பாதிக்காதீங்க. கவனமாக இருங்க. பிரச்சனை வந்தால் விட்டுக் கொடுப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். செலவுகள் குறையும். சேமிப்பு உயர்த்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று முக்கியமான வேலைகளை ஒரு பேப்பர் பேனா எடுத்து குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற மறதி, பிரச்சனைகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். அலட்சியம் வேண்டாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேகத்தோடு விவேகம் அதிகமாக வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். சொத்து பிரச்சனைகள் தீரும். கைநிறைய மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். அடுத்தவர்கள் சொல்வதை கேட்கமாட்டீங்க. அடம் பிடிப்பீங்க. வீம்பு பிடித்துக் கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளை நீங்களே தேடி சொல்வீர்கள். இன்று வேகத்தோடு செயல்படுவதை விட, விவேகத்தோடு செயல்படுவது தான் நல்லது

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுபமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சொந்த ஊரிலிருந்து சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்வீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. புது முடிவுகளில் அவசரம் வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் கனவு ஆசை நிறைவேறும். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலையும் மன நிம்மதியும், கை நிறைய பணமும் கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எவ்வளவு பெரிய கோபமாக இருந்தாலும், உங்களுக்கு சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். இன்றைய நாள் நிதானம் மிக மிக அவசியம்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கடமை தவறாத நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் சுறுசுறுப்பு வெளிப்படும். நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால், பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சர்வசாதாரணமாக சமாளித்து விடுவீர்கள், ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மழையில் வெளியில் செல்லும்போது மட்டும் கவனம் தேவை.

சற்று முன்