நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடிய அற்புதமான தெய்வமாக தான் மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மேலும் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஐஸ்வர்யத்தையும் சகல செல்வத்தையும் மகாலட்சுமி தாயாரோடு சேர்த்து முருகப்பெருமானும் நமக்கு அருள் புரிவார். அப்படி முருகப்பெருமானும் சகல ஐஸ்வர்யத்தையும் நமக்கு அருள் புரிவதற்கு கந்த சஷ்டியின் மூன்றாம் நாள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கந்த சஷ்டி மூன்றாம் நாள் பரிகாரம்
முருகப்பெருமானை முழுமனதோடு நம்பி யார் ஒருவர் அவரை சரணாகதி அடைந்து விடா முயற்சியுடன் வழிபாடு செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமான் வேண்டிய வரத்தை அருள்வார். மேலும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் இது வேண்டும் அது வேண்டும் என்று எதுவும் கேட்காமல் அவரை காண்பதை மட்டுமே தன்னுடைய வேண்டுதலாக நினைத்து செய்யும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் கொடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அருள்வார் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் கந்த சஷ்டியின் மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் காலையிலும் மாலையிலும் இந்த ஒரு தண்ணீரை வீட்டில் தெளிக்க அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அந்த தண்ணீர் தான் மஞ்சள் தீர்த்தம். ஒரு டம்ளரில் சுத்தமான எச்சில் படாத தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை கலந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். வீட்டில் வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்த பிறகு இந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
இந்த மஞ்சள் தண்ணீரை நாம் காலையில் எப்படி தயார்செய்து தெளிக்கிறோமோ அதே போல் மாலையிலும் தயார் செய்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து தெளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஒருவேளை தான் தெளிக்க முடியும் என்றாலும் பரவாயில்லை. வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய கந்த சஷ்டியின் மூன்றாம் நாள் மஞ்சளை தண்ணீரில் கரைத்து இப்படி தீர்த்தமாக வீட்டில் தெளிக்கும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் நீங்குவதோடு லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு சகல செல்வங்களையும், ஐஸ்வர்யத்தையும் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி மூன்றாம் நாள் வழிபாடு
கந்தசஷ்டியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். அப்படி வழிபாடு செய்வதோடு இந்த எளிமையான பரிகாரத்தையும் செய்யும் பொழுது கூடுதல் பலன் நமக்கு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.