கந்த சஷ்டியின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமாக நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது ஒவ்வொரு விதமான பலனை நாம் பெறுகிறோம். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கக்கூடிய வறுமை, கஷ்டம், துன்பம் போன்ற அனைத்தும் நம்மை விட்டு நீங்கி மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு கந்த சஷ்டி மூன்றாம் நாளை நாம் தவறவிடக்கூடாது. அப்படிப்பட்ட கந்தசஷ்டி மூன்றாம் நாள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கந்த சஷ்டி மூன்றாம் நாள் வழிபாடு
முருகப்பெருமானுக்கு உரித்தான கந்த சஷ்டி விழாவின் மூன்றாவது நாளாக அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி மாதத்தின் ஏழாம் நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு முருக பெருமானின் அருளோடு மட்டும் அல்லாமல் மகாலட்சுமியின் அருளையும் பரிபூரணமாக பெறச் செய்யும். அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை முற்றிலும் நீங்கும். இந்த வழிபாட்டை விரதம் இருக்கக் கூடிய நபர்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த வழிபாட்டை செய்து முருகப்பெருமானின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும்.
இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம் அல்லது மதியம் 12:15 இல் இருந்து 1:15 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம். வீட்டில் முருகப்பெருமானின் சிலை அல்லது வேல் இருக்கும் பட்சத்தில் அதற்கு பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் முருக பெருமானுக்கு முன்பாக சற்கோண கோலம் போட்டு இருப்போம் அல்லவா? அதில் ச ர வ என்ற மூன்றெழுத்திற்கு மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு திசை பார்க்கவாரு இருக்க வேண்டும்.
முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக தேன் திணை மாவு போன்றவற்றை வைக்கலாம். தினைமாவில் மாவிளக்கு செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய சிறப்பான பலனை பெற முடியும். பிறகு வாசனை மிகுந்த மலர்களை அதிலும் குறிப்பாக மல்லிகை பூவை பயன்படுத்தி முருகப்பெருமானுக்கு பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கந்த சஷ்டி கவசத்தை 3 முறை பாராயணம் செய்ய வேண்டும். நிறைவாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
மந்திரம்
” ஓம் ஐம் சரவணபவ ஓம் “
இதையும் படிக்கலாமே: விக்னங்கள் தீர்க்கும் தேங்காய்
முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெற்று வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமையும் கஷ்டமும் துன்பமும் தீர கந்த சஷ்டி மூன்றாவது நாள் முழுமனதோடு இந்த வழிபாட்டை செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.