வளங்களை வாரி வழங்கக்கூடிய நாளாக தான் வளர்பிறை சதுர்த்தி நாள் திகழ்கிறது. எப்படி தேய்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீருகிறதோ அதே போல் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களும் வளர்ந்து கொண்டே செல்லும். அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வளர்பிறை சதுர்த்தி வழிபாடு
முழு முதல் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் விநாயகப் பெருமானுக்குரிய திதியாக சதுர்த்தி திதி திகழ்கிறது என்றும் மாதத்தில் இரண்டு முறை சதுர்த்தி திரி வரும் என்றும் அவ்வாறு வரக்கூடிய சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்களும் சங்கடங்களும் தீருவதோடு அனைத்து விதமான வளங்களையும் பெற முடியும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் ஐப்பசி மாத வளர்பிறை சதுர்த்தியில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று வளர்பிறை சதுர்த்தி வருகிறது. பொதுவாக சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை மாலை நேரத்தில் தான் வழிபாடு செய்வோம் என்பதால் இந்த வழிபாட்டையும் நாம் மாலை நேரத்திலேயே செய்யலாம். மாலை 6:00 மணி போல் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இதற்கு முதலில் நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு தட்டை வைத்து அந்த தட்டிற்கு மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு ஒரு தேங்காயை சரிசமமாக உடைத்து அதன் நீரை ஊற்றிவிட்டு அந்த தேங்காய் மூடி களை நவதானியத்தின் மேல் வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாறு தீபமீற்றி விநாயகர் பெருமானுக்கு முன்பாக வைக்க வேண்டும்.
இவ்வாறு வைத்த பிறகு அந்த தீபச்சுடரை பார்த்தவாறு “ஓம் ஸ்ரீம் கணபதயே நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி விநாயகப் பெருமானின் அருளை பெற வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு தலையில் ஐந்து முறை கொட்டி, மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். பிறகு ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலைக்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அதற்கு மேல் மஞ்சளில் பிடிக்கப்பட்ட பிள்ளையாரை வைத்து அந்த பிள்ளையாருக்கு அருகம்புல்லை சமர்ப்பணம் செய்து என்றென்றும் உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களையும் தர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து கற்பூர தீப தூப ஆராத்தி காட்ட வேண்டும்.
தேங்காய் தீபம் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு வெற்றிலையில் வைத்த மஞ்சுளை சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்றாக குழைத்து வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளிக்க வேண்டும். குறிப்பாக பணம் வைக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் அவரவர்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சளுக்கு கீழ் வைத்த நாணயத்தையும் அருகம்புள்ளையும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கும் மஞ்சளை துளசி செடியில் ஊற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து விதமான வளங்களையும் நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியம் சிறப்பாக நடைபெற வணங்கக்கூடிய தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார் என்பதால் விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி தினத்தில் நாம் விநாயகரை வழிபாடு செய்து அனைத்து விதமான வளங்களையும் பெறுவோம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.