- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு

கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு

- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய கந்த சஷ்டி விரத நாட்களான ஆறு நாட்களும் முருகப்பெருமானின் பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்து முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி கந்த சஷ்டி விரதத்தின் ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு விதமாக முருகப்பெருமானின் வழிபாடுகளை செய்வதன் மூலம் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தின் நான்காம் நாள் அன்று செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு

முருகப்பெருமானுக்கு உரிய கிரகமாக திகழ்வது செவ்வாய் பகவான் என்றும் செவ்வாய் பகவான் தான் நம்முடைய வேலை தொடர்பான அனைத்து காரியங்களுக்கும் உறுதுணையாக இருக்கக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானின் அருளை பெறுவதற்கு கந்த சஷ்டி விரத நாட்களில் நான்காம் நாளை நம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய முருக வழிபாடு செவ்வாய் பகவானால் நமக்கு கிடைக்கக்கூடிய வேலை மற்றும் வேலை சார்ந்த முன்னேற்றங்களுக்கு உதவி புரியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம், காலையில் 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள் செய்யலாம், காலை 10:45 மணியிலிருந்து 11:45 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் செய்யலாம். முருகனுக்கு முன்பாக சற்கோண கோலம் போட்டிருப்போம் அல்லவா? அதில் ச ர வ ண என்ற நான்கு இடங்களிலும் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

முருகப்பெருமானுக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இதே மஞ்சள் நிற மலர்களை பயன்படுத்தி அர்ச்சனையும் செய்து கொள்ளலாம். முருகப்பெருமானுக்கு அன்றைய தினம் நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு கலவை சாதத்தை தயார் செய்து வைக்க வேண்டும். அதனுடன் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் தேங்காய் போன்றவற்றையும் வைக்க வேண்டும். வீட்டில் முருகப் பெருமானின் சிலை, வேல் இருக்கும் பட்சத்தில் அதற்கு சந்தன அபிஷேகம் செய்வது மிகுந்த பலனைத் தரும். இவ்வாறு வழிபாட்டிற்கு அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டு முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை நான்கு முறை பாராயணம் செய்ய வேண்டும். நான்கு முறை பாராயணம் செய்ய இயலவில்லை என்பவர்கள் நான்கு முறை அதை ஒலிக்க செய்து கேட்க வேண்டும்.

- Advertisement -

பிறகு முருகப்பெருமானின் மந்திரமான “ஓம் கம் சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி மஞ்சள் நிற மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் பரிபூரணமான அருளால் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் முருகன் மந்திரம்

முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி நாட்களில் விரதம் இருப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் மட்டுமல்லாமல் நாம் வேண்டிய வரத்தை பெற முடியும். அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தின் நான்காம் நாளன்று வேலை தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேற இந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்