- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேமிப்பாக உயர தேங்காய் பரிகாரம்

பணம் சேமிப்பாக உயர தேங்காய் பரிகாரம்

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த விரத நாட்களில் மிகவும் முக்கியமான நாட்களாக திகழ்வதுதான் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளக்கூடிய ஆறு நாட்களும். இந்த ஆறு நாட்களிலும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடிய வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அவற்றை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் நம் கையில் வரக்கூடிய பணம் சேமிப்பாக உயர்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் சேர தேங்காய் பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் நாம் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதிக அளவில் பணத்தை சம்பாதித்தால் மட்டும் பத்தாது, அது சேமிப்பாக உயர வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பலரும் பணத்தை சம்பாதித்தாலும் சம்பாதித்த பணத்தை சேமிப்பாக மாற்றுவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகவே திகழ்கிறது. எவ்வளவு முயற்சி செய்தும் சம்பாதித்த பணத்தில் ஒரு சிறு தொகையை கூட சேமிப்பாக சேர்க்க முடியவில்லை என்பவர்களும் சம்பாதித்த பணம் வீண் விரயமாகிக் கொண்டே இருக்கிறது என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பணத்தை சேமிப்பது என்பது சிரமமான ஒன்று என்றாலும் அதை சாத்தியமாக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை கந்த சஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை முருகனின் ஆலயத்தில் செய்யும் பொழுது அதீத பலன் கிடைக்கும் என்று கூறலாம். இதற்காக நாம் நம்முடைய வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒன்று, மூன்று என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம்மால் எத்தனை தேங்காயை வாங்கிக்கொண்டு செல்ல முடியுமோ அத்தனை தேங்காயை வாங்கி முருகனின் ஆலயத்தில் தானமாக தர வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்துவிட்டு வரலாம்.

ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயே முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தேங்காயை உடைத்து அதில் சிறிது குங்குமத்தை தடவி முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த தேங்காயை பயன்படுத்தி ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம் வீண்விரயமாகாமல் சேமிப்பாக உயரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி ஐந்தாம் நாள் வழிபாடு

கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம் வீண்விரயமாகாமல் சேமிப்பாக உயர்வதற்கு கந்த சஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாள் முருகப்பெருமானை நினைத்து முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்