கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நபர்களும் தினமும் முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த கந்தசஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வகையில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது அதற்கேற்றார் போல் பலனையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும், பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் கந்தசஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கந்த சஷ்டி ஐந்தாம் நாள் வழிபாடு
வீட்டிற்கு வெளியே எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் வீட்டிற்குள் வரும்பொழுது மன நிம்மதியும் அமைதியும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அதை தவிர்த்து விட்டு வீட்டிற்குள் நுழையும் பொழுதே சண்டை சச்சரவுடன் நுழைவது என்பது இன்றைய காலத்தில் பலரது குடும்பத்திலும் நடக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட சண்டை சச்சரவுகளை நீக்கி குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் எதிர்பாலம் சிறப்பாக அமைவதற்கும் கந்த சஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலையில் 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள்ளோ அல்லது 10:45 மணியிலிருந்து 11 45 மணிக்குள்ளோ அல்லது மாலை 5 30 மணியிலிருந்து 8:30 மணிக்குள்ளோ இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். முதலில் முருகப் பெருமானின் சிலை அல்லது வேல் இருக்கும் பட்சத்தில் அதற்கு குங்குமபிஷேகம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக முருகப் பெருமானுக்கு முன்பாக போட்டிருக்கும் சற்கோண கோலத்தில் ச ர வ ண ப என்ற ஐந்து எழுத்துக்களின் மேல் ஐந்து அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தமாறு தீபம் ஏற்ற வேண்டும். முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக பழ வகைகள் மற்றும் சர்க்கரை பொங்களை வைக்க வேண்டும். மேலும் முருகப் பெருமானுக்கு வாசனை மிகுந்த மலர்களாலும் மருதாணி இலைகளாலும் அலங்காரம் செய்ய வேண்டும். அர்ச்சனைக்கு மருதாணி இலைகளை பயன்படுத்தும் பொழுது அதிக அளவு பலன் கிடைக்கும்.
அன்றைய தினம் “ஓம் நமோ நமோ சரவணபவ நம ஓம்” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் காலையிலும் மாலையிலும் இந்த மந்திர வழிபாட்டை செய்வது மிகுந்த பலனைத் தரும். மேலும் கந்த சஷ்டி கவசத்தை அன்றைய தினம் ஐந்து முறை படிக்கவும் அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த எளிமையான வழிபாட்டை செய்வதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் கந்த சஷ்டி நான்காம் நாள் பரிகாரம்
முருகப்பெருமானின் பரிபூரணமான அருளை பெற்று குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும் கந்த சஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாள் இந்த முறையில் வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.