- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசர்வ மங்களம் உண்டாக கந்தசஷ்டி ஏழாம் நாள் வழிபாடு

சர்வ மங்களம் உண்டாக கந்தசஷ்டி ஏழாம் நாள் வழிபாடு

- Advertisement -

முருகன் எப்படி ஆறு நாட்களும் சிவபெருமானை வழிபாடு செய்து ஆறாவது நாள் அன்று சூரசம்காரனை வதம் செய்து ஏழாவது நாள் தேவயாணையை திருமணம் செய்து மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாரோ அதேபோல் நாமும் ஆறு நாட்கள் விரதம் இருந்து சூரசம்கார நாள் அன்று விரதத்தை பூர்த்தி செய்திருப்போம். அதற்கு மறுநாளானன திருக்கல்யாண வைபவம் நடக்கும் பொழுது நாமும் அதில் கலந்து கொண்டு நம்முடைய வேண்டுதலை முன் வைக்கும் பொழுது அந்த விரதத்தின் பலனாலும், முருகனை வழிபாடு செய்ததின் பலனாலும் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். அப்படிப்பட்ட விரத்தை நிறைவு செய்வதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கந்தசஷ்டி ஏழாம் நாள் வழிபாடு

ஒரு விரதத்தை ஆரம்பிப்பது எப்படி முக்கியமான ஒன்றோ அதேபோல் தான் அந்த விரதத்தை நிறைவு செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. எந்த அளவிற்கு சிறப்பாக விரதத்தை தொடங்குகிறோமோ அதே அளவிற்கு சிறப்பான முறையில் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த விரதத்தின் பலனை முழுமையாக நம்மால் பெற முடியும். எந்த வேண்டுதலுக்காக நாம் இந்த விரதத்தை மேற்கொண்டாலும் அந்த வேண்டுதல் சரியாக நிறைவேற வேண்டும் என்னும் பட்சத்தில் இந்த வழிபாட்டை சிறப்பாக நாம் செய்ய வேண்டும்.

- Advertisement -

கந்தசஷ்டி ஆறு நாட்களும் விரதம் இருந்து வழிபாடு செய்தவர்களாக இருந்தாலும் சரி, விரதம் இருக்காமல் வழிபாடு செய்தவர்களாக இருந்தாலும் சரி, ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து வழிபாடு செய்தவர்களாக இருந்தாலும் சரி, கந்த சஷ்டியின் ஏழாவது நாள் இந்த ஒரு வழிபாட்டை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான காரிய தடைகளும் நீங்கும். இப்படி இந்த காரிய தடைகள் நீங்குவதால் நாம் வேண்டிய வேண்டுதல் விரைவில் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளும் வந்து சேரும்.

கந்த சஷ்டி விரதத்தின் ஏழாம் நாள் எப்படி அனைத்து முருகன் ஆலயங்களிலும் திருமணம் நடைபெறுவதற்காக கோலாகலமாக அலங்காரம் செய்திருப்பார்களோ அதே போல் நாமும் நம்முடைய வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து மா இலை தோரணம் கட்ட வேண்டும். வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு நிலை கதவிற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மாலை 6 மணிக்கு வீட்டு நிலை வாசலின் இரண்டு புறங்களிலும் கிழக்கு திசை பார்த்தவாறு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அந்த தீபத்திற்கு அருகிலே டைமண்ட் கற்கண்டையை சிறிதளவு இரண்டு புறங்களிலும் வைத்து விட்டு முருகப் பெருமானின் தாரக மந்திரமான “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே நிலைவாசலுக்கும் நிலை கதவிற்கும் வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். அப்படி தூப ஆராதனை காட்டும் பொழுது நிலை வாசலுக்கு மட்டும் காட்டாமல் வீடு முழுவதும் காட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முருகப் பெருமானின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும். நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய காரிய தடைகள் முற்றிலும் விலகுவதோடு மங்களங்கள் அனைத்தும் பெருகும்.

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி விரத நிறைவு நாள் பூஜை

கந்த சஷ்டி விரதத்தை இருந்தவர்களும் சரி வழிபாட்டை செய்தவர்களும் சரி விரதம் இருக்காமல் வழிபாடு செய்யாமல் இருந்தவர்களும் சரி கந்த சஷ்டி விரதத்தின் ஏழாவது நாளான திருக்கல்யாண நாளன்று வீட்டில் இப்படி வழிபாடு செய்ய முருகப் பெருமானின் அருளால் மங்களங்கள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்