- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடங்கலை நீக்கும் கால பைரவர் வழிபாடு

தடங்கலை நீக்கும் கால பைரவர் வழிபாடு

- Advertisement -

அனைத்து ஆலயங்களில் கூட காக்கும் கடவுளாக இருக்கக்கூடியவர் கால பைரவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காட்டுவதோடு நமக்கு காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. காலபைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நவகிரகங்களின் அருளையும் நம்மால் ஒருசேர பெற முடியும். அப்படிப்பட்ட கால பைரவரை வழிபாடு செய்வதற்குரிய வளர்பிறை அஷ்டமி நாளில் செய்ய வேண்டிய ஒரு சூட்சமமான வழிபாடு நம்முடைய தடைகளையும் தடங்கல்களையும் நீக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு துர்மரணங்கள் ஏற்படாது என்றும், எதிரிகளின் தொல்லை நீங்கும் போன்ற பலவிதமான நன்மைகள் உண்டாகும். மேலும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானின் குருவாக இவர் திகழ்வதால் நவக்கிரக தோஷத்தை நீக்கி நமக்கு நல்வழியை காட்டுவார். தேய்பிறை அஷ்டமியில் கடன் பிரச்சினை தீருவதற்காக காலபைரவரை வழிபாடு செய்வதன் மூலம் அற்புதமான பலனை பெற முடியும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்வதற்குரிய வழிபாட்டையும் வளர்பிறை அஷ்டமியில் நம்முடைய செல்வ வளம் அதிகரிப்பதற்குரிய வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வளர்பிறை அஷ்டமியாக வருகிறது. இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை முற்றிலும் நீக்கும். எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும் தடை வந்து கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் வளர்பிறை அஷ்டமிலோ அல்லது தேய்பிறை அஷ்டமியிலோ அல்லது பைரவருக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடியது வெட்டிவேர் மாலை. வெற்றிகளை வாரி வழங்கக் கூடிய ஒரு வேராக தான் இந்த வெட்டி வேர் திகழ்கிறது. இதை மாலையாக தொடுத்து அருகில் இருக்கக் கூடிய காலபைரவரின் ஆலயத்திற்கு எடுத்துச்சென்று பன்னீரில் முழுவதுமாக நனைத்து காலபைரவருக்கு சாற்ற வேண்டும். காலபைரவர் வாசனை பிரியர் என்று கூறப்படுவதால் வெட்டி வேருடன் சேர்த்து ஜவ்வாது, புனுகு போன்ற பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதன் மூலம் கால பைரவர் மனம் மகிழ்ந்து நம்முடைய செயல்களில் இருக்கக்கூடிய தடைகளை நீக்குவார். மேலும் 8 நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வைத்து மனமுருகி வேண்ட வேண்டும்.

- Advertisement -

அப்படிபட்ட தடைகள் நீங்கி அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற்று விட்ட பிறகு கால பைரவருக்கு அபிஷேகத்திற்காக அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதோடு வஸ்திரமும் வாங்கி கொடுத்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் வழிபாடு செய்ய நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியத்திலும் தடைகள் வரும் பட்சத்தில் அந்த தடைகளை நீக்கி காரிய வெற்றியை பெறுவதோடு மனநிம்மதியையும் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை அஷ்டமி வெற்றிலை பரிகாரம்

கால பைரவருக்கு உகந்த தினத்தில் இந்த முறையில் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு காலபைரவரின் அருளால் தடைகளும் தடங்கல்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்