- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை அஷ்டமி வெற்றிலை பரிகாரம்

வளர்பிறை அஷ்டமி வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவனாகவும், சனீஸ்வர பகவானின் குருவாக திகழக்கூடியவராகவும், காவல் காக்கும் கடவுளாக இருக்கக்கூடியவராக திகழ்பவர் தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்றும் வளர்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது அஷ்ட லட்சுமிகளின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் வளர்பிறை அஷ்டமியில் செய்ய வேண்டிய ஒரு வெற்றிலை வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர்கள் நவகிரகங்கள் என்றும் அதிலும் குறிப்பாக சனீஸ்வர பகவானை கூறலாம் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானின் குருவாக திகழக்கூடிய கால பைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடுவதோடு மற்ற கிரகங்களால் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்தும் அவர் நம்மை காப்பாற்றுவார் என்றே கூறலாம். அப்படிப்பட்ட காலபைரவருக்குரிய வளர்பிறை அஷ்டமியில் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

அக்டோபர் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று வளர்பிறை அஷ்டமி வருகிறது. இன்றைய நாளில் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் பைரவரின் படம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் இரண்டு வெற்றிலை, மூன்று பாக்கு வைக்க வேண்டும். அதற்கு மேல் 11 நாணயங்களை வைக்க வேண்டும். எந்த நாணயமாக இருந்தாலும் பரவாயில்லை எண்ணிக்கையில் 11 என்று இருக்க வேண்டும். பிறகு இதற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

தரையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். 108 முறை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். தூபம் போடும் பொழுது பச்சை கற்பூரம், ஜவ்வாது, ஏலக்காய் போன்றவற்றையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை எடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். வெற்றிலை பாக்கு நாணயம் அப்படியே அன்று இரவு முழுவதும் இருக்கட்டும். மறுநாள் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு அந்த நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி வளர்பிறை அஷ்டமியில் சொர்ன ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்வதன் மூலம் கோடீஸ்வர யோகம் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரம் கிடைக்க முருகன் வழிபாடு

வளர்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு கால பைரவரின் அருளாலும் அஷ்டலட்சுமிகளின் அருளாலும் கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்