- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்றைய ராசிபலன் – 05 ஜூலை 2026

இன்றைய ராசிபலன் – 05 ஜூலை 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால் வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக பிரச்சனைகள் வராது. விடுமுறை நாள் என்பதால் இன்று உங்களுடைய கவனம் முழுவதும் குடும்பத்தில் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆர்வத்தோடு நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். விடுமுறை நாள் என்று கூட பாராமல் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். உங்களுக்கான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். சிக்கலான பிரச்சனைகளுக்கு கூட சுலபமான தீர்வை கண்டுபிடிப்பீர்கள். இளைஞர்கள் மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நேரத்திற்கு சாப்பாடு நேரத்திற்கு தூக்கம் என்று, மீதமுள்ள நேரத்தில் மனதிற்கு பிடித்த நபரோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். பயணங்களால் மனதில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். நிதிநிலைமை சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். வேலை, வியாபாரத்திலும் பெருசாக டென்ஷன் இல்லை.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்தையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. மனதிற்கு பிடித்தவர்களோடு வாக்குவாதம் செய்து சண்டை போடக்கூடாது. பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. பிடித்த விஷயங்களை கை நழுவ விடாதீர்கள். நல்ல விஷயங்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் எடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவர்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். தேவையற்ற சிந்தனை விலகும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். திறமை வெளிப்படும் நாள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சுப செலவுகள் ஏற்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை என்று பெயர் புகழ் பாராட்டு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு இது போன்ற நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்களுடைய தவறுகளை நீங்களே திருத்திக் கொள்வீர்கள். செலவுகள் மட்டும் கொஞ்சம் அதிகரிக்கும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வர வாய்ப்பு உள்ளது பார்த்துக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

சற்று முன்