- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 02 ஆகஸ்ட் 2026

இன்றைய ராசிபலன் – 02 ஆகஸ்ட் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய நேர்மை, உங்களுடைய வாழ்க்கையை நல்வழிப்படுத்தி கொடுக்கும். பல நாள் தொந்தரவுகள் இன்று சரியாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இன்று நேரம் போவதே தெரியாது. சுப செலவுகள் கொஞ்சம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை, புதுப்புது விஷயங்களை, தேடித்தேடி கற்றுக்கொள்வீர்கள். புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்றை இழந்தது போல சோகமாகவே இருந்தவர்கள் எல்லாம், இன்று அந்த சோகத்தில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் துன்பம் உங்களை விட்டு விலகும். மன நிம்மதி கிடைக்கும். உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்வீர்கள். இன்று கொஞ்சம் வேலை பளு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. டயர்ட் ஆகாம இருக்க என்ன தேவையோ அதை செய்யுங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய கௌரவம் உயரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். அடுத்தவர்களுடைய உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். தீராத சிக்கல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வசீகரத் தோற்றம், வசீகர பேச்சு அனைவரையும் கவரும்படி அமையும். நாலு பேருக்கு நல்ல எடுத்துக்காட்டாக நீங்கள் இருப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் அதிகமாவதற்கு வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் வரலாம். சில பேருக்கு வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் நிதானதோடு இருக்க வேண்டும். தேவையற்ற நண்பர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த விடுமுறை நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை கையில் எடுப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டை சுத்தம் செய்யும் வேலை இனிதே நிறைவடையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வது, நேர்த்திக்கடன் செலுத்துவது, இது போன்ற வேலைகளை இன்று செய்து பாருங்கள். நல்ல பலன் கை மேல் கிடைக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். பகை விலகும். வியாபாரத்திலும் வேலையிலும் நினைத்தது போல முன்னேற்றம் வரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன சஞ்சலம் கொஞ்சம் இருக்கும். தேவையில்லாத சிந்தனையால் உங்களுடைய மனது கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆகவே சிந்தனையை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். இறைவனை நம்புங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். எந்த விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். ஆரோக்கியத்தை கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருங்கள். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் இருக்கட்டும். புது மனிதர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உங்களுடைய குடும்ப விவகாரங்களை அனாவசியமாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். சக ஊழியர்களோடு, சக நண்பர்களோடு நீண்ட நேரம் நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். சில பேருக்கு வெளியூர் பயணங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. பயணங்களின் மூலம் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.

சற்று முன்