- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 08 ஆகஸ்ட் 2026

இன்றைய ராசிபலன் – 08 ஆகஸ்ட் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது வேலை தேடுவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும். திறமையாக செயல்படுவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு இருப்பீர்கள். அடக்கம் பணிவு வெளிப்படும் நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று பக்குவத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு தேவையான உதவிகளை சரியான நேரத்தில் செய்து கொடுப்பீர்கள். மனநிறைவை அடைவீர்கள். எதிரி பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட நாள் பகையோடு இருந்த உறவுகள் ஒன்று சேரும். பிள்ளைகளுடைய கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் அசதி கொஞ்சம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எந்த இடத்திலும் உங்களுடைய சுயமரியாதையை விட்டு தர வேண்டாம். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவது நல்லது. இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். நல்ல புது அனுபவங்கள் கிடைக்கும். பெற்றவர்களுடைய மனதில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் வியாபாரத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். நண்பர்களோடு இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். அலுவலக வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை புதிய ஒப்பந்தங்கள் போடலாம். லாபமான நாளாக இன்று அமையும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான, தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கர்வம் அதிகரிக்கும். எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ அந்த இடத்தில் உங்களுக்கான நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இன்று வெற்றி அடையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் சொத்து தகராறுகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். நேரத்தை வீணடிக்காமல் உங்கள் கடமைகளை செய்து முடித்தால் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. கோபத்தால் சில நல்ல விஷயங்களை இழக்க கூடிய வாய்ப்புகளும் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை நிதானத்தோடு செயல்படுங்கள். அவசர முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் என்று யோசனையை குறைத்துக் கொள்ள வேண்டும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் சரி, வேலையை முதலில் முடித்துவிட்டு பிறகு பிரச்சனையை பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பக்குவத்திற்கு நீங்கள் வரவேண்டும். பிரச்சனையை யோசித்துக் கொண்டே இருந்தால் நேரம் போய்விடும். பிறகு இந்த நாள் இறுதியில் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும் ஜாக்கிரதை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். சாந்தமாக சிந்திப்பீர்கள். காரியத்தில் கவனத்தோடு செயல்படுவீர்கள். கொஞ்சம் சுயநலம் வெளிப்படும். இருந்தாலும் நல்லது நடக்கக்கூடிய நாளாக தான் இன்று இருக்கும். பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. இறைவனின் பரிபூரண அருளால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தைரியம் வெளிப்படும் நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நல்ல சாப்பாடு மன நிறைவான நாளாக இந்த நாள் அமையப் போகிறது. இறைவனின் பரிபூரண அருளால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

சற்று முன்