மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். புது எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் பதட்டம் இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டீர்கள். இதனாலே பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மன தைரியத்தை வர வைத்துக் கொள்ளவும். மனதில் பட்ட விஷயத்தை கூடுமானவரை வெளிப்படையாக பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். நிதிநிலைமை சீராகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண்விறையை செலவுகள் குறையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்னதாக மன பயம் இருக்கும். செய்யும் வேலையில் தெளிவு இருக்காது. பதடாடத்தோடு வேலை செய்யும் போது பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள். இறை நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீண்விரய செலவுகள் ஆகும். அனாவசியமாக ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்க வேண்டாம். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் மன நிம்மதி, இரவும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லாபமான நாளாக இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். விவசாய தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும் சுப செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. குடும்பத்தோடு சேர்ந்து இருந்து நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தோடு சேர்ந்து இருந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கு இருக்கும். இருந்தாலும் பெரிய பாதிப்புகள் வராது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சொந்த பந்தங்களை இழப்பதற்கும், புதிய எதிரிகள் உருவாவதற்கும் வாய்ப்பு இருக்கு. கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை. அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்கவும். இறை வழிபாடு செய்யுங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். சோம்பேறித்தனம் இருக்கும். தாமதத்தால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சுறுசுறுப்பை அதிகப்படுத்திக்கோங்க. சோம்பேறித்தனத்தை விட்டுருங்க நிச்சயம் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். பணம் தானாக உங்கள் பையைத் தேடி வரும். நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.