மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். குடும்ப உறவுகளோடு ஒற்றுமை இருக்கும். தேவையில்லாத எதிரி தொல்லை விலகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்தையும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை சரியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு கஷ்டம் கொடுத்து வந்த விஷயங்கள் தானாக உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுலபமாக உங்களுடைய பெயரை காப்பாற்றிக் கொள்வீர்கள். நேர்மையோடு நடந்து கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கவனித்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் விரைய செலவாக வாய்ப்பு உள்ளது. கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகம் வரும். நல்ல வாய்ப்புகளை கை நழுவக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். கவனமாக இருக்க வேண்டும். நிதானம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் சிந்தித்து செயல்படுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிறைய பணத்தை செலவு செய்து எந்த ஒரு பொருளையும் இன்று வாங்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தனம் தானியம் லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும் .
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தேவையில்லாத பிரச்சனைகள் தானாக விலகும். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாளாக அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கப் போகிறது. புது நண்பர்களின் அறிமுகம், புது அனுபவத்தை கொடுக்கும். உறவுகளோடு இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நீண்ட தூர பயணங்களை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் தானாக விலகும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பகை விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். குடும்பத்தோடு இன்று வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உற்சாகத்திற்கு குறைவு இருக்காது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். பிரமோஷனுக்கு சம்பள உயர்வுக்காக முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சில பேருக்கு இடம் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும்.