மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோபத்தால் உங்களுக்கு வரவேண்டிய நல்ல விஷயங்கள், உங்கள் கை நழுவி செல்லக்கூடும். நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள். தேவை இல்லாத எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். இன்று விட்டுக் கொடுத்துப் போனால் கெட்டுப் போவதற்கு வாய்ப்பே கிடையாது. இறைவழிபாடு செய்வது மன அமைதியைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகம் தான். இருந்தாலும் மனநிறைவோடு உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிறைவாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கும் நிலவும். நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. விரைய நிறைய செலவுகள் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை பராமரிப்பது இதுபோல வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். மனநிறைவு ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவமான, பெருமையான நாளாக இருக்கும். அவமானப்பட்ட இடத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நல்ல காலம் கை கூடி வரும். காரியத்தடை விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகரிக்க தான் செய்யும். இருந்தாலும் மன நிறைவு இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நிம்மதி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இன்று நேரம் போவதே தெரியாது. நீண்ட நாள் பிரிந்த உறவுகளோ அல்லது நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்விர்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வாரா கடன் வசூல் ஆகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், நல்ல உபசரணை என்று இந்த நாள் ராஜ வாழ்க்கை வாழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிலபேர் சொந்த ஊரில் இருக்கப் போறீங்க. உங்களுடைய சொந்த பந்தங்களோடு பேசி நேரத்தை செலவு செய்யப் போறீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை கொஞ்சம் அதிகம் இருக்கும். நிதானம் தேவை. அதிகமாக பேசுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஆடம்பரம் வேண்டாம். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. இறை வழிபாடு செய்யுங்கள். நிதானமாக இருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருப்பீர்கள். முன்கோபம் அதிகம் வந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையோடு அனுசரித்து செல்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும்.