- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 02 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 02 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். நடக்கும் நல்லதை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாதீங்க. புது மனிதர்களை முழுசாக நம்பாதீங்க. விநாயகர் வழிபாடு செய்துவிட்டு இந்த நாளை துவங்குங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவைப்படுகிறது. அவசரம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். அதிக நேரம் கைப்பேசி பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். முழு கவனமும் வேலையில் இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத கெட்ட பழக்க வழக்கத்திற்கு அடிமையாயிராதீங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். நிதிநிலைமை சீராக இருக்கும். பண்டிகையை கொண்டாட கொஞ்சம் கொஞ்சமாக தயாராகுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இல்லை.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற வம்பு வழக்குகள் தானாக உங்களை விட்டு விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று கடமைகளை சரியாக முடித்து விட்டு, உங்களுக்கு தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். நிம்மதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் வராது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் யோசனை அதிகமாகவே இருக்கும். சிந்தித்து நேரத்தை வீணடிக்காதீங்க. வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துங்கள். குறிப்பாக இளைஞர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்க வேண்டும். முன்கோபம் வேண்டாம். பெரியவர்களது பேச்சை உதாசீனப்படுத்த வேண்டாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்னதாக மறதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய பொறுப்புகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சாதனை படைக்கக்கூடிய நாளாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முடிந்தால் இயலாத இரண்டு பேருக்கு உதவி செய்யுங்கள். மேலும் நன்மைகளை பெறலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம், புது அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். டென்ஷன் குறையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உற்சாகமாக இந்த நாள் இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாள். காரிய தடை விலகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து, மகிழ்வீர்கள். தீபாவளி கொண்டாட தயாராகி விடுவீர்கள். நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை. நிதானம் தேவை. செலவை கட்டுப்படுத்த வேண்டும். வீண்விரய செலவுகளை கொஞ்ச நாள் தள்ளிப் போடுவதன் மூலம், பெருசாக பிரச்சனைகள் வராது. உடல் உபாதைகளை கவனிக்காமல் விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நிதிநிலைமை சீராக இருக்கும். அனாவசிய செலவு குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். நல்லது நடக்கும்.

சற்று முன்